Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-09-2022 (Youth Special)
Share:

By Village Missionary Movement

Monday, 12-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 12-09-2022 (Youth Special)

 

தெபொராளே எழுந்திரு                                     

 

“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது ...” - ஏசாயா 60:1

 

யார் இந்த தெபொராள்? இவர்கள் தான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த முதல் பெண் நியாயாதிபதி. பொதுவாக பெண்கள் ரொம்ப Soft emotionally என்று சொல்லுவாங்க. வேதத்தில் கூட பெண் ஒரு பெலவீன பாத்திரம்-னு சொல்றாங்க. ஆனா இதே நேரம் தெபொராளைப் போல தைரியமான பெண்களையும் பார்க்க முடிகிறது. நியா. 4:6,7,8 –ஐ நாம் வாசிக்கும் போது தெபொராள், பாராக்கை போருக்குப் போகும்படி தேவன் உரைத்ததை ஞாபகப்படுத்துகிறாள். அப்பொழுது பாராக் “நீ என்னோடு கூட வந்தால் போவேன், இல்லையென்றால் போகமாட்டேன்” -னு சொல்கிறார். இதை படிக்கும்போது தெபொராளின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

இன்று இதை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களையும் வாலிபப் பிள்ளைகளையும் உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.

 

We are called to win the battle! தோல்வியைக் கண்டு துவண்டு உட்கார நாம் அழைக்கப்படவில்லை. கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற கொஞ்ச பெலத்தோடு எழும்பிப் பிரகாசிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். சில சூழ்நிலைகளை face பண்ண உங்க வாழ்க்கையில் பெலன் இல்லைன்னு நினைச்சு முடங்கிப் போய் இருக்கலாம். கர்த்தரால் மாற்ற முடியாத சூழ்நிலைன்னு ஒண்ணுமே கிடையாது. அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிற தேவன். நீங்க செய்ய வேண்டியது ஒண்ணுதான். உங்க சூழ்நிலை எதுவாயிருந்தாலும், அதுல தேவன் செயல்பட இடம் கொடுங்க. ஆண்டவர், நீங்கள் தெபொராளைப் போல எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புகிறார். தெபொராளிடம் இருந்து நாம் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ளலாம்.

 

1. கர்த்தரை அவள் தனது பெலனாக வைத்திருந்தாள்.

2. ஒரு பெண்ணாக தெபொராளுக்கு நியாயம் விசாரிப்பது மட்டும் வேலை அல்ல. அவள் ஒரு மகளாக, ஒரு மனைவியாக, ஒரு தாயாக பல பொறுப்புகளை திறம்பட செய்திருக்க வேண்டும்.

 

இந்த வாலிப வயசுல நீங்க இயேசப்பாவ பிடிச்சிக்கிட்டீங்கன்னா உங்க சந்ததிக்கே அது ஆசீர்வாதமாயிருக்கும். என்னால முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருக்கிற உன்னைக் கொண்டுதான் கர்த்தர் இந்தத் தேசத்தை அசைக்க விரும்புகிறார். மறவாதே! எனவே தெபொராளைப்போல எழும்பிப் பிரகாசிக்க உங்களைத் தேவன் கையில் ஒப்புக்கொடுங்கள். அவர் அதிசயமாய் உங்களை வழிநடத்துவார்! அல்லேலூயா!

- Mrs. திவ்யா பெர்னாட் 

 

ஜெபக்குறிப்பு

நமது ஊழியத்தின் மூலம் வெளியிடப்படும் ஜெபக்குழுத் தலைவர்கள் கையேடு என்று பத்திரிகை அநேகருக்குப் பிரயோஜனமாகப் பயன்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet