Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-09-2022
Share:

By Village Missionary Movement

Friday, 09-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 10-09-2022

 

வாழ வைக்கும் தெய்வம் 

 

“...நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்“ - யோவான்10: 10 

 

இன்றைய காலக் கட்டத்தில் மனிதர்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது. எல்லாம் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடக்க வேண்டும் என்ற எண்ணங்களும் மேலோங்கி வருகிறது. இதனால் இளம் பருவத்தினர் முதல் முதியோர் வரை தற்கொலை செய்து கொள்வது தினசரி செய்திகளில் தவிர்க்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் மக்களின் அறியாமையும் வாழ்வைத் தந்த இரட்சகரைப் பற்றி அறிவில்லாமையுமே! உலகின் எந்த சவால்களையும் ஜெயிக்கும் வல்லமை “இயேசு கிறிஸ்து” என்ற நாமத்தில் உள்ளது. அவரே மரணத்தின் மேல் வெற்றி சிறந்தார் என்ற செய்தி சொல்லப்படவேண்டும். அவரது நாமத்தை நாவு அறிக்கை செய்தும் அவர்முன் முழங்கால்கள் யாவும் முடங்கவும் வேண்டும். எனவே தற்கொலை எண்ணங்களால் பிடிக்கப்பட்டவர்களுக்கு மேற்கண்ட வசனத்தைப் பற்றிய வெளிப்பாடுகள் அவசியம் சொல்லப்பட வேண்டும். 

 

தற்கொலை முடிவுக்கான காரணங்கள்:

1. எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை... 

2. எதிர்ப்பு வந்துவிடுமோ என்ற பயம்... 

3. ஏக்கங்கள் தீர்க்கப்படாமை... 

4. யதார்த்தங்களை எதிர்கொள்ள இயலாமை...

5. எதிர்காலம் மற்றும் எதிர்நோக்க வேண்டிய சவால்களைப் பற்றிய பயம் 

 

மனவியல் (Psychology) ஆராய்ச்சிகளில் எதிர்மறை எண்ணங்களுக்கு மூன்று காரணிகளைச் சொல்கின்றனர். 1. பயம் அல்லது பய உணர்வு. 2. மன அழுத்தம் அல்லது சிதைவு. 3. பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் ஓடிவிடுதல் ஆகியனவே. உலகத்தில் எத்தனையோ பயம் நிறைந்த சவால்களை, சூழல்களை சந்தித்தவர்கள், ஜெயிக்க முற்பட்டவர்கள் பயமுண்டாக்கும் சூழ்நிலைகளைச் சந்தித்து சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் எதிர்மறை சிந்தனைகளின் பின்னால் ஓடியிருந்தால் இன்று அநேக சாதனையாளர்கள் இடம் பிடித்திருக்க முடியாது.

 

மேலும் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்னர், நாம் நித்தியமாய் வாழவேண்டிய இன்னுமொரு நித்திய வீட்டில் பங்குபெறவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தேவ பெலனோடு ஓடும்போது இந்த தற்கொலை எண்ணங்கள் முறிந்துபோகும். மேலேயுள்ள வசனத்தில் சொல்லப்பட்டபடி, பிசாசானவன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறதால் தற்கொலை எண்ணங்களை சிந்தையிலே விதைத்து, அருமையான ஆத்துமாக்களை மரணத்திலே விழப்பண்ணுகிறான். எனவே பிசாசுக்கு எதிர்த்துநின்று, சர்வாயுத வர்க்கங்களைப் பிடித்துக்கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும். ஜீவ சுவாசத்தை மனுஷனில் ஊதியவர், ஜீவன் உண்டாயிருக்க வந்தவர் நம்மையும், இந்த தலைமுறை மக்களையும், பரிபூரண ஜீவனுடன் வாழ்ந்து, நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கச் செய்யும்படி தற்கொலை தடுப்பு நாளான இன்று ஜெபிக்க வேண்டியது நமது கடைமையல்லவா?

- Mrs. மெர்சி ஜெசிந்தா  

 

ஜெபக்குறிப்பு 

மாவட்டம் தோறும் 100 எஸ்தர் ஜெபக்குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş nakitbahis nakitbahis giriş marsbahis jojobet superbetin matbet jojobet