By Village Missionary Movement
Tuesday, 06-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 07-09-2022
விலை மதிப்புள்ள பொருள்
“...உன் கண்ணீரைக் கண்டேன்;..” - ஏசாயா 38:5
ஒரு தூதன் ஒருநாள் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தான். “நான் பூமியிலுள்ள விலைமதிப்புள்ள பொருளை பரலோகத்திற்குக் கொண்டு செல்வேன்“ என்று தீர்மானம் பண்ணி ஒவ்வொரு இடமாகச் சுற்றிப் பார்த்தான். அழகான காடுகள், அங்குள்ள பூக்கள், பறவைகள், கண்களுக்கு மிகவும் விருந்தாகும் அருவிகள் என்று இயற்கைக் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தன. ஆனால் பரலோகத்தில் இவைகள் எல்லாம் இன்னும் அழகாக இருக்கின்றதே என்று எண்ணி, அதனை விட்டுவிட்டு, மக்கள் இன்னும் அதிக மதிப்புக் கொடுக்கிற தங்கத்தைப் பார்த்தான். ஆனால் பரலோகத்தில் உள்ள மண் எல்லாமே பொன்தானே என்று நினைத்துக்கொண்டு பறந்தபோது, ஒரு வீட்டிலிருந்து அழுகையின் சத்தம் கேட்டது. “இயேசப்பா பாவத்திலிருக்கிற ஜனங்களை இரட்சியும்” என்று ஒருவர் அழுது ஜெபிக்கும்போது, அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான், பூமியில் விலையேறப் பெற்றது இதைவிட வேறு எதுவாக இருக்கமுடியும் என்று சொல்லி தன் கரங்களில் அந்த கண்ணீர் துளியைப் பிடித்து இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு சென்றான்.
உலகப் பொருட்களை வைத்துத்தான், இந்த உலகம் ஒருவரை Value பண்ணும். ஆனால் கண்ணீரின் Value தெரிந்தால் போதும் சாதித்துவிடலாம். நெகேமியா தனது கண்ணீரின் ஜெபத்தினாலே சாதிப்பதை நாம் வேதத்திலே காணலாம். நெகேமியா, அர்தசஷ்டா ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக, அரசாங்க வேலையில் இருந்தார். ஆனால் எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டதும், வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டதுமாய் கிடக்கிறது என்ற செய்தியை, எருசலேமிலிருந்து வந்த சகோதரர்கள் மூலம் அறிகிறார். எனவே துக்கித்து அழுது, சில நாட்கள் விடுமுறை எடுத்து, உபவாசித்து, ஜெபித்துவிட்டு ராஜாவிடம் வேலைக்கு வந்துவிடுகிறார்.
ஆனால் அவரது கண்ணீரின் Value ராஜாவை விசாரிக்க வைக்கிறது. நெகேமியாவுக்கு அலங்கம் கட்டுவதற்கு எவைகளெல்லாம் தேவையோ, அனைத்தையும் கொடுக்க வைக்கிறது. 70 வருடங்களாக இடிபட்டுக் கிடந்த அலங்கம் 52 நாளைக்குள்ளே கட்டப்படுகிறது. இது நெகேமியாவின் கண்ணீரின் ஜெபத்திற்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
நாமும் கூட நமது தேவைக்காக ஆண்டவரிடம் கண்ணீர் விடுவோம். “எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே ஆண்டவருடைய சித்தமாக இருக்கிறது”. அந்த தரிசனத்துக்காக நொறுங்குண்ட இருதயத்துடன் அழுது ஜெபிக்கும்போதுதான், தேவனும் நம் மூலம் செயல்பட முடியும். ஆத்துமாக்களை பரலோகத்திற்கு கொண்டு செல்ல நமது கண்ணீரை அர்ப்பணிப்போம். பரலோகத்திற்கு கொண்டு செல்ல முடிகின்ற ஒரே சொத்தான ஆத்துமாக்களை ஏராளமாகச் சம்பாதிப்போம்! வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வோம்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
பணித்தளங்களில் நடைபெற்று வரும் “எழுப்புதல் விரும்புவோர் முகாமில் கலந்துகொள்கிற நபர்கள் செயல்படுகிறவர்களாக எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250