Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-09-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 03-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 04-09-2022 (Kids Special)

 

சிட்டுக்குருவி 

 

“...அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” - ரோமர் 8:15

 

ஹலோ குட்டிச்செல்லங்களே! நீங்க, குருவி கூடு கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? ஆமாவா... ஓ... நீங்க கூட வீடு கட்டுவீங்களா? எப்படி ? கடற்கரைக்கு போனா மணலில் வீடு கட்டி விளையாடுவோம் . ஓ ... சூப்பர் ரொம்ப ஜாலியா, சூப்பரா இருக்குந்தானே! நீங்க எல்லாம் கைகளாலே வீடு கட்டி விளையாடுவீங்க. ஆனால் குருவிக்கு கையே இல்லையே எப்படி கூடு கட்டும்? ம் ...ம் .. சரியாய் சொன்னீங்க. அதனோட வாயால்தான் கூடு கட்டும். ஆமா, அது எப்படி கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்ததுன்னு கதை கேட்கலாமா?

 

ஒரு அழகான சிட்டுக்குருவி தன் அலகால் கூடு கட்ட ஆரம்பித்தது. சின்ன சின்ன குச்சிகள், தேங்காய் நார்கள் இவைகளை ஒவ்வொன்றாக கொண்டு வந்து அழகாய் கூடு கட்டிக் கொண்டிருந்தது. திடீரென்று பலமான காற்றடித்ததால் அந்தக் கூடு சிதறிக் கீழே விழுந்தது. இரைதேடி விட்டு தன் கூட்டிற்கு வந்த சிட்டுக்குருவி சிதைந்து கிடந்த தன் கூட்டைப் பார்த்ததும் ... ஓ வென்று அழுது, “ஐயோ! நான் கஷ்டப்பட்டு கட்டின வீடு அல்லவா?” என்று கவலைப்பட்டது என்று நினைக்கிறீர்களா? அது தான் இல்லை “இந்த மாதிரி நான் எத்தனை கூடு வேண்டுமானாலும் கட்டுவேன். எனக்குத்தான் பரம தந்தை ஒருவர் இருக்கிறாரே, அவர் எனக்கு help பண்ணுவார் “ என்று சட்டென்று பறந்து போய் ... சிறிது நாட்களில் பட்டென்று வேறொரு கூடு கட்டி முடித்தது. 

 

கீழே விழாதபடி நல்லா safe- ஆக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அந்தக் கூட்டிலே சில முட்டைகளை இட்டு அழகான குஞ்சுகளைப் பொரித்தது. அது மட்டுமா ... அந்த குஞ்சுகளுக்கு சாப்பாடு கொடுத்து நன்றாக பராமரித்தது. அந்த சின்ன சிட்டுக்குருவியின் குடும்பத்தை பார்க்கும் போது, உண்மையாகவே ஆச்சர்யமா இருக்குதுல. “ ஏ ! சிட்டுக்குருவியே உன்னால மட்டும் எப்படி இவ்வளவு happy யாகவும், சளைக்காமல் உன் கடமைகளை செய்யவும் முடியுது?” இப்படி கேள்வி கேட்க தோணுது இல்லையா? வாங்க வாங்க சிட்டுகுருவி வந்திட்டு அதுகிட்டயே கேட்கலாம் .. பாடல் மூலமா பதில் சொல்லப் போறியா?ம் ..ம்.. சூப்பர்.

 

என்ன! தம்பி – தங்கச்சி, சிட்டுக்குருவி கூட Jesus தன்னைப் படைத்த நோக்கத்தை அறிந்து, தன்னோட கடமைகளை சோர்ந்து போகாம சந்தோஷமா செய்ததைப் பார்த்தாயா? ச்சே .. இந்த பாடத்தில் fail ஆகிட்டேன். இது எனக்கு கடினமா இருக்கேன்னு சோர்ந்துபோகக் கூடாது. உனக்கும் ஒரு தந்தை இருக்கிறார் உதவி செய்ய .... மறந்து போகாதே ... Ok. Bye.

- Sis . தெபொராள்  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş