Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-09-2022
Share:

By Village Missionary Movement

Saturday, 03-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 03-09-2022

 

Free

 

“…இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” - மத்தேயு 10:8

 

நடுத்தர வர்க்கத்தினர் பலர் இலவசத்தை விரும்புவதில்லை. ஏனென்றால் இலவசம் மிகவும் தரமற்றது என்பர். ஆனால் ஒருவர் தான் கண்டுபிடித்ததை இவ்வுலகிற்கு இலவசமாய் கொடுத்துள்ளார். Jonas Edward Salk என்ற உயிரியல் ஆராய்ச்சியாளர் தான்` உலகில் முதல் போலியோ தடுப்பூசி மருந்தை உருவாக்கினார். இவர், தான் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசிக்கு காப்புரிமை ( சொந்தம் கொண்டாடும் ) பெறவில்லை. அப்படி செய்திருந்தால் இன்று அதன் விலை பல்லாயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆனால், உலகெங்கிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் போலியோ தடுப்பூசி மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக காப்புரிமை பெறாமலே விட்டுவிட்டார். அதனால்தான் உலகெங்கிலும் இன்றும் குறிப்பாக எல்லா நாட்டு அரசுகளும் மலிவாகவோ அல்லது இலவசமாகவோ தங்கள் குடிமக்களுக்கு விநியோகிக்கின்றன. ஒருமுறை இவரிடம் இதுபற்றி “ஏன் நீங்கள் உங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறவில்லை?” என்று கேட்டதற்கு. அவர் “சூரியனுக்கு யாரேனும் காப்புரிமை பெறுவார்களா“ என்றும் “சூரியன் எல்லோருக்கும் பொதுவானது. அதனால் இவ்வுலகமே வாழ்வடைகிறது ; எனவே நான் கண்டுபிடித்ததை இலவசமாய் இவ்வுலகிற்கு கொடுத்து விட்டேன்“ என பதில் சொன்னார். 

 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் பல வித நன்மையான காரியங்களை சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக்கொடுத்தது போலவே, காரியங்களைச் செய்தும் காண்பித்தார். அப்படி ஆண்டவர் இயேசு சொல்லிக் கொடுத்த காரியத்தில் ஒன்றுதான் “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்“ – மத்தேயு 10:8 என்ற கட்டளை. 

 

ஆம் பிரியமானவர்களே! இன்றும் கூட நம் வாழ்வில் அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்ற பல ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியோடிருக்கிறோம். ஆனால் அவற்றிற்கு நாம் எந்த விலைக்கிரயமும் செலுத்தவில்லை. இதற்காக நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து, சிலுவையில் தம் சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாய் சிந்தியுள்ளார். நாம் அதன் மதிப்பை உணராமல், அசட்டுத்தனமாய் மறந்து விடுகிறோம். அது மட்டுமின்றி அதனை மற்றவர்களுக்கு இலவசமாய்க் கொடுக்கவும் கர்த்தர் நமக்கு கட்டளையிடுள்ளார். Edward என்ற விஞ்ஞானி தான் கற்றுக்கொண்டதை தனக்கென வைத்துக்கொள்ளாமல், உலகத்திற்கு இலவசமாய் அர்ப்பணித்தது, இன்று வரை அனேக உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. அதே போல நாமும் இலவசமாய் பெற்ற நம் இரட்சிப்பை மற்றவர்களுடன் இலவசமாய் பகிரும் போது, அநேக ஆத்துமாக்கள் காப்பாற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை.

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு: 

அருப்புக்கோட்டை பணித்தளத்தில் இன்று நடைபெற உள்ள “ எழுப்புதல் விரும்புவோர் முகாம்” –ல் தேவன் முன்குறித்திருக்கிற நபர்களை தடையில்லாமல் அழைத்து வர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al