By Village Missionary Movement
Thursday, 01-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 02-09-2022
சரித்திரம் படைத்த சாமானியர்கள்
“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.“ - யோபு 42:2
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றபோது ஒரு போர்வீரனுக்கு தன் வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது. தன் வீட்டிற்கு அருகே உள்ள தெருவை அடைந்தான். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதை பார்த்ததும், எதிரிகள் தன் நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டான்.
டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக்கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. சற்றுநேரம் அந்தப் போர்வீரன் நின்றான். ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த ஷூவை திடீரென கவனித்தான். முன்பு தனது மனைவிக்கு வாங்கிக் கொடுத்த ஷூ போல் இருந்தது. உடனே தன் வீட்டிற்கு ஓடினான். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தான். அது அவனது இளம் மனைவிதான் என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். பொதுக் கல்லறையில் தன் மனைவியை புதைக்க விரும்பவில்லை என்றும், தனிக் கல்லறையில் தன் மனைவியைப் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலை தருமாறு வேண்டினான். அனுமதி கிடைத்தது. வாகனத்திலிருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும் போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தே போனான். உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றாள். இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்கு பின், கிட்டதட்ட உயிருடன் புதைக்கப்படவிருந்த போர்வீரனின் மனைவி கர்ப்பமுற்றாள். அவளுக்கு பிறந்த குழந்தை தான் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியான ஹிலாரி கிளிண்டன். ஹிலாரி கிளிண்டனே தான் எழுதிய நூலான “Hard choices“ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்
ஆகவே சாமானியர்கள் என்று கருதப்படுகிற பலரை சரித்திரம் படைக்க வைக்க தேவனால் கூடும். விறகு வெட்டியின் மகனான வில்லியம் கேரி இந்தியாவின் பல மாநிலங்களின் கண்களை திறந்தார். அவர் பல மொழிகளில் வேதாகமத்தை இரவு பகல் விழித்திருந்து மொழிபெயர்த்தார். அனேக பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைகழகங்களை நிறுவினார். சாதாரண மீனவரான பேதுரு 3௦௦௦, 5௦௦௦, பேர்களை தேவனிடம் மனம் திரும்பும்படியாக பிரசங்கித்த பிரதான அப்போஸ்தலரானார்
புல்லலக்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்த ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்த சகோதரர் டேவிட் கணேசன் நுற்றுகணக்கான மிஷனெரிகளை உருவாக்குகிற மிஷனெரி ஸ்தாபனமான கிராம மிஷனெரி இயக்கத்தின் தலைவரானார். என்னே! தேவனின் வியக்கத்தகு செயல்கள்!
அன்பு கண்மணியே! நீ சாதாரணமானவனல்ல. தேவன் உன்னைக் கொண்டு அசாதாரணமான காரியங்களை செய்யமுடியும் உன்னை சாதனையாளராக மாற்றுவது தேவனுக்கு இலேசான காரியம். உன் வாழ்வின் ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவை சம்பூரணமாக்குகிற தேவன் உன்னோடு தான் இருக்கிறார். அல்லேலுயா1
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக் குறிப்பு
நமது மிஷனெரிகள் ஒவ்வொருவரையும் தேவன் வல்லமையாய் எடுத்துப் பயன்படுத்த.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250