Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31-08-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 31-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 31-08-2022

 

பொய்ச் சாட்சி 

 

“பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.” -யாத்திராகமம் 20:16

 

நான் சிறுவயதாயிருக்கும்போது “மோட்சப்பிரயாணம்” என்ற கதையை ஒளிச்சித்திரப் படமாக சர்ச்சில் காண்பித்தார்கள். அதன் கதாநாயகன் கிறிஸ்தியானும் அவரது நண்பர் உண்மையானவனும் மாயாபுரியை (உலகத்தை) அடைந்தார்கள். அங்கு கண்காட்சியில் உலகப்பிரகாரமான புகழ், வீண்பெருமை போன்றவற்றை விற்க முயன்றனர். “நாங்கள் உண்மையைத்தான் வாங்குவோம்” என்று கூறியவுடன் கருத்து வேறுபாடு உண்டாகி, ஒரே கூச்சலும் குழப்பமாகிவிட்டது. எனவே தலைவன் அவர்களை நீதிபதியிடம் அனுப்பினான். பொறாமை, புகழ்விரும்பி என்பவர்கள் “இவர்கள் கண்காட்சியின் விற்பனையை தடுத்தனர்” என்று பொய்ச் சாட்சி கூறினார்கள். திரும்பவும் பெரிய கூச்சல் எழுந்தது. எனவே உண்மையானவனுக்கு மரணதண்டனை தீர்ப்பளித்து கம்பத்தில் கட்டி நெருப்பு மூட்டினர். இவ்வாறாக உண்மையை இவ்வுலகில் எரித்து விட்டனர்.

 

ஆம், பிரியமானவர்களே! நாமும் கூட ஒருவரைப் பற்றி பொய்யானவைகளைக் கூறி, அவருடைய நற்பெயரையும், புகழையும் திருடி அவரைப் பற்றிய உண்மையைக் கொன்று விடுகிறோம். ஒருவருக்கு சமுதாயத்தில் இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்படி பொய்ச் சாட்சிகள் கூறுவது எத்தனை தீயசெயல். நாம் நமது அவயங்களில் ஒன்றாகிய நமது சிறிய நாவை பயன்படுத்தி பொறாமையினாலோ அல்லது மூட நம்பிக்கையினாலோ ஒருவரைப் பற்றி உண்மையற்ற வதந்தி பரப்புகிறோம். அமைதியாகவோ அல்லது சரீர செய்கைகளாலோ பிறரை அவமதிக்கும் காரியத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறோம். இது எத்தனை பெரிய சமுதாய தீங்கு. பிறர் இதனைக் காணாதிருந்தாலும் கர்த்தர் காண்கிறார்.

 

எனவே கர்த்தருடைய பிள்ளைகளே! “பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக” என்ற கற்பனையின் மூலம் ஒருவரது நற்பெயரின் மேல் உள்ள தேவனுடைய கரிசனையைக் காண்கிறோம். நாமும் கர்த்தருக்குப் பயந்து நெருப்பைப் போன்ற இந்த நாவினால் பிறரது வாழ்க்கைச் சக்கரத்தை கொளுத்தி விடாதபடி, ஆவியானவர் நமது விஷம் நிறைந்த நாவைத் தொடுவதற்கு அர்ப்பணிப்போம். 1பேதுரு 2:22 “இயேசு கிறிஸ்துவின் வாயில் வஞ்சனை காணப்படவில்லை” என்று கூறுகிறது. நாமும் மற்றவர்கள் சொல்பவற்றையும், செய்பவற்றையும் நல்ல எண்ணத்தோடு அங்கீகரிப்போம். ஆமென். 

- A.பியூலா

 

ஜெபக்குறிப்பு:

கரூரில் நடைபெறவுள்ள “எழுப்புதல் விரும்புவோர் முகாம்” –ல் எழுப்புதலை வாஞ்சிப்போர் அதிக அளவில் பங்குபெற, எழுப்புதலடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet