Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26-08-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 25-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 26-08-2022

 

கோள் சொல்வதால்….

 

“விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.” – நீதிமொழிகள் 26:20

 

நம்முடைய வீட்டில், உறவினர்கள் மத்தியில், வேலைபார்க்கும் இடங்களில் அரசியல் சண்டைகள், குழப்பங்கள், பிரிவினைகள் மோதல்கள் வருவது ஏராளம், ஏராளம்! இவற்றிற்கெல்லாம் முக்கியமான காரணங்களில் ஒன்று-கோள் சொல்லுதல்! 

 

கோள் சொல்லுதலிலிருந்து தப்பித்துக்கொள்ள தத்துவஞானி சாக்ரடீஸ் ஒரு ஆலோசனை சொன்னார். அவருடைய மாணவர்களில் ஒருவன் அவரிடம், “உம்முடைய நண்பர் ஒருவரைப்பற்றி நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன்” என்றான். சாக்ரடீஸ் அவனிடம், “நீ அதை என்னிடம் சொல்லும் முன் மூன்று முறை அதை வடிகட்டிவிட்டாயா?” என்றார். வியப்புடன் அவரைப் பார்த்த மாணவனிடம், “என்ன வடிகட்டி என்றுதானே பார்க்கிறாய், 1) நீ என்னிடம் சொல்லப்போவது 100% உண்மையானதா? 2) நீ சொல்லப்போவது நல்ல காரியமா? 3) இந்த செய்தி யாருக்காவது பயனளிக்குமா?” இந்த மூன்றுக்கும் அவன் அளித்த பதில் “இல்லை”. சாக்ரடீஸ், “நல்லதல்லாத, யாருக்கும் பயனளிக்காத அந்த செய்தி ஏன் என்னிடம் சொல்லப்படவேண்டும்?” என்றார். மாணவன் அமைதியாய் சிந்தித்தான். 

 

கோள் சொல்லுகிற காரியம், வெளிப்படையான பெரிய பாவம் போல் காணப்படாவிட்டாலும், அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் மோசமானது. ஆகவே கர்த்தர் மோசேக்கு இதைக் குறித்து கட்டளையிட்டதென்னவென்றால், “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம்; நான் கர்த்தர்” (லேவி.19:16) என்று சொல்லுகிறார். சாலொமோன் இதைக் குறித்து கூறும்போது கோள்சொல்லுகிறவன் பிராண சிநேகிதனையும் பிரித்துவிடுகிறான் என்றும், விளையாட்டுப் போலிருக்கும் அவனுடைய வார்த்தைகள் உள்ளத்திற்குள் தைக்கும் என்றும் கூறுகிறார். மேலும், எப்படி விறகு இல்லாவிட்டால் நெருப்பு எரியமுடியாதோ, அப்படியே கோள்சொல்லுகிறவர்கள் இல்லாவிட்டால் சண்டை அடங்கும் என்றும் சாலொமோன் ஞானி கூறுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதின நிருபத்திலே, அநேக பாவங்களைக் குறித்து சொல்லும்போது, புறங்கூறுதல், கோள்சொல்லுதல் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்று பயந்திருக்கிறேன் (2 கொரி. 12: 20, 21) என்கிறார். 

 

பிரியமானவர்களே! கோள்சொல்லுகிற பாவம் உங்களிடம் உண்டோ என்று பாருங்கள். பிறரைப் பற்றின எந்தக் காரியத்தையும் மற்றவர்களிடம் கூறும்போது கர்த்தரும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ற பயம் நமக்குள் இருக்கட்டும். சாக்ரடீஸ்-ன் ஆலோசனையும் நமக்கு உதவட்டும். 

- Mrs. ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு: 

“ஜெபக்குழுக்கள் கையேடு” இதழின் மூலம் ஜெபக்குழுக்கள் நடத்துவதற்கு வேண்டிய ஆலோசனைகளும், ஜெபக் குறிப்புகளும் அநேகருக்குப் பயனுள்ளதாய் அமைய ஜெபியுங்கள்.   

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet