Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-08-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 23-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 23-08-2022

 

நீ வேலை செய்யாவிடில்… 

 

“பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.” - மத்தேயு 20:6                                                                                    

 

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்த திறன் தேவைப்படும் 15 அரசுப் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்த இளைஞர்களின் எண்ணிக்கை 10,000. இவர்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகிய ஜிதேந்திர மெளர்யாவும் ஒருவர். விண்ணப்பித்தவர்களில் பலரும் அதிகம் படித்தவர்கள், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், பொறியாளர்கள், MBA பட்டதாரிகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள். அப்பணிக்காக நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட ஜிதேந்திர மெளர்யா ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறியது, “இவ்வளவு படித்திருந்தாலும் சில நேரங்களில் தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கக்கூட பணமில்லை. எனவே எனக்கு இங்கே ஏதாவது வேலை கிடைக்கும் என்று வந்துள்ளேன்” என்றார்.

 

ஜிதேந்திராவின் சொற்கள் இந்தியாவின் மிக மோசமான வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே மந்த நிலையை எதிர்கொண்டு வந்த இந்தியப் பொருளாதாரத்தை கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போன்ற பல சிக்கல்கள் பொருளாதார நெருக்கடியையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் பெருக்கியுள்ளன. இதையெல்லாம் கவனிக்கும்போது எதிர்காலத்தைக் குறித்த ஒரு அச்ச உணர்வு எல்லோரின் ஆழ்மனதிலும் காணப்படுகிறது.

 

அன்பானவர்களே! இந்தக் காரியங்களைக் குறித்து நாம் அச்சப்படத்தேவையில்லை. உன் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். நமது படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள், வருங்காலத்தைக் குறித்து சிந்தனைகள் என சஞ்சலப்பட வேண்டாம். நம் கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர் நமக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார்.

 

கர்த்தராகிய இயேசுவானவர் “அறுவடை மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” என்று தம்முடைய ஊழியக் களத்திற்கு அழைப்பு ஒன்றை விடுவித்தார். மேலும் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய சேரும்படி சும்மா இருப்பவர்களை வருந்தி அழைப்பதையும் நாம் வாசிக்கிறோம். இச்செய்தியை வாசிக்கின்ற நீங்கள் ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்யும்படி அவர் அழைக்கின்றார். தேவனுடைய களத்தில் வேலையாட்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். இயேசுவை அறியாமல் நரகத்திற்கு சென்று கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்க நீங்கள் வருவீர்களா? 

- P.ஜேக்கப் சங்கர்.

 

ஜெபக்குறிப்பு:

கர்த்தர் நமக்குத் தந்த தரிசனகளை நிறைவேற்ற ஒவ்வொரு மாநிலத்திலுமிருந்து 12 மிஷனரிகள் எழுப்பப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş