By Village Missionary Movement
Friday, 19-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 20-08-2022
உங்கள் பாரம்பரியங்கள்
“மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்...” – மத்தேயு 15:9
ஒரு சபையின் வானொலி விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது. “நீங்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து கேள்விப்பட்டதால் மதத்தின் மேல் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். ஆண்டவர் இயேசுவும் மதத்தின் மேல் ஆர்வமாய் இருக்கவில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம்! ஆனால் ஒருவருடன் ஒருவர் ஐக்கியமாய் இருக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்பதை அதிகமாய் கற்றுக்கொடுத்தார். மேலும், எங்கள் சபையின் எல்லாக் காரியங்களையும் நீங்கள் விரும்பாமலும் இருக்கலாம். ஆனால் நாங்கள் உறுதியான தொடர்பைக் கொடுக்கிறோம். கர்த்தரை நேசிக்கவும், ஒருவரையொருவர் நேசிக்கவும், நாங்கள் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் வரவேற்கப்படுகின்றீர்கள்” என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்தது.
2௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு வந்ததான ஆண்டவர் இயேசுகிறிஸ்து, தான் ஒரு மதத்தை ஸ்தாபிக்கும்படியாகவும், மதத்தலைவராக மாற வேண்டுமென்ற நோக்கத்தில் அவர் வரவில்லை. உலகில் அநேகர், சில கொள்கைகளை வகுத்துக் கொண்டு, மதத்தை ஸ்தாபித்து அதை வளர்க்க விரும்பினார்கள் . இப்படிச் செய்வதினால் மனுஷருக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்று பார்த்தால், பாவத்தின் பெருக்கம்தான் மதத்தின் பெயரால் மனுஷருக்கு கிடைத்தது. கர்த்தராகிய இயேசுவானவர் தம்முடைய ஊழிய நாட்களில் மதத்தின் பெயரில் வைராக்கியம் கொண்டிருந்த பரிசேயரையும், சதுசேயரையும் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பிய மதத்தலைவர்கள், இரக்கத்தையும், நியாயத்தையும், கடவுளைக் குறித்த அறிவையும் விட்டுவிட்டார்கள் என்பதைக் குறித்து இயேசுவானவர் தம்முடைய ஊழிய நாட்களிலே, சரியாய்ப் போதித்திருந்தார்.
இன்றைக்கும் உலகில் கோடிக்கணக்கான மக்களும் அவரவர் தங்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் பாரம்பரியங்களும் சடங்காச்சாரங்களும் மிக முக்கியமென்று கருத்தில் கொள்கின்றனர். ஆனால் கிறிஸ்தவமோ பாரம்பரியங்கள் அல்ல, மெய்யான தெய்வமாம் ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைகளையும் கேட்டு அதைப் பின்பற்றுவதுமே ஒரு மனுஷனுக்கு பிரதானமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்ற கட்டளையாக இருக்கின்றது என தெளிவுபடுத்துகின்றது. இதை வாசிக்கின்ற நீங்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டிருக்கலாம். இங்கே கவனிக்கப்பட வேண்டியது, ஒரு மனிதனுக்கு மதம் முக்கியமல்ல. மனித நேயத்தோடு கூடிய ஆண்டவரை வழிபடுவதுதான் சரியான பண்பாக இருக்கும். ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வாராக.
- P.ஜேக்கப் சங்கர்.
ஜெபக்குறிப்பு:
நாமக்கல்லில் நடைபெறவுள்ள “எழுப்புதல் விரும்புவோர் முகாம்” – ல் எழுப்புதலை வாஞ்சிப்போர் அதிக அளவில் பங்குபெற, எழுப்புதலடைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250