Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-08-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 18-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 19-08-2022

 

வேறுபாடில்லை 

 

“நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே” – கலாத்தியர் 3:26

 

ஜாதி வேறுபாடு கடைபிடிக்கப்படும் கிராமம் ஒன்றிலுள்ள தன் உறவினர் வீட்டிற்கு வெளியூரில் வசிக்கும் சிறுபெண் விடுமுறைக்கு வந்தாள். அப்போது ஒரு கீழ் ஜாதிக்காரர் தண்ணீர் கேட்க, அந்தப் பெண்ணின் உறவினர், “தண்ணீரை கையில் ஊற்றிவிட்டு வா” என்று தண்ணீர் செம்பைக் கொடுத்தார்கள். அவளுக்கு அது புதிதாக இருந்தது. அவள் மனம் அதைச் செய்ய உடன்படவில்லை. எனவே அவள் அந்த மனிதனிடம் தண்ணீர் செம்பைக் கொடுத்து குடிக்கச் சொன்னாள். அவரும் அதை குடித்துச் செல்ல, பெண்ணின் உறவினர், “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள். “அவரும் நம்மைப் போன்ற மனிதர்தானே, எனவேதான் நான் இப்படி செய்தேன்” என்றாள்.

 

வேதத்திலும் கூட அப்போஸ்தலராகிய பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது, “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்” என்று எழுதுகிறார். அப்படியானால் கிறிஸ்துவின் சாயலாக இருக்கும் நாம் யாவருமே அவருக்குள் ஒன்றாய் இருக்கிறோம். நம்மில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்று பொருள். முந்தைய காலங்களில் கிரேக்கர், ரோமர், ஆண், பெண் என இருந்த அனைத்துப் பிரிவினைகளை தகர்க்கவே பவுல் இவ்வாறாகக் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவும் நம்முடைய வாழ்வில் புறஜாதிகளாய்க் கருதப்பட்ட சமாரியர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களிடம் அன்போடும், கரிசனையோடும் நடந்து கொண்டதை நாம் காணமுடியும்.

 

அன்பானவர்களே! நம்மில் எத்தனை பேர் இந்த சிறு பெண்ணைப் போன்று மனிதர்கள் அனைவரும் சமம், எந்த ஜாதியாக இருந்தாலும் வேறுபாடு பார்க்கக்கூடாது, ஜாதி, நிறம், மொழி அனைத்தையும் தாண்டி அன்புகூரவேண்டும் என்று பரந்த மனப்பான்மையோடு இருக்கிறோம். வேதம் காட்டும் வழியில் நடப்பவர்கள் எனக் கூறிக்கொள்ளும் நாம், இந்த ஜாதி வேறுபாடுகளை எவ்வாறு அணுகுகிறோம். இன்று சபைகளுக்குள்ளும் சாதி வேறுபாடுகள் வேரூன்றிவிட்டன. திருமணம் என்று வரும்போது இது அதிகமாகவே காணப்படுகிறது. கிறிஸ்துவுக்குட்பட்ட மணமகன் – மணமகளை தங்கள் பிள்ளைகளுக்கு வரனாக விசுவாசிகள் தேடும் நிலை வந்தால், சபையில் ஒரு மறுமலர்ச்சி உண்டாகும். நிச்சயம் சபை சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். ஆம் தேவன் நம் அனைவரையும் தம்முடைய சாயலாக சிருஷ்டித்தவர். அவர் பார்வையில் அனைவரும் சமமே. எனவே, நாமும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக அனைவரையும் ஒன்றாய் எண்ணும்போது தேவ நாமம் மகிமைப்படும். தேவனும் மகிழ்ச்சியடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Mrs. ஏஞ்சலின்.

 

ஜெபக்குறிப்பு:

“மோட்சப் பயணம்” இதழில் வெளிவரும் தின தியானச் செய்திகள் 8 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. You Tube, Face Book மூலம் அநேகர் படித்துப் பயன்பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al