By Village Missionary Movement
Sunday, 07-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 07-02-2021 (Kids Special)
அழகிய பூந்தோட்டம்
“என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;…” – சங்கீதம் 40:8
அன்பு செல்லக் குட்டிகளே! இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நீங்க நல்லா இருப்பீங்கன்னு நம்புகிறோம். ஆமா தானே! ஏன் தெரியுமா? நாங்க எல்லாம் உங்களுக்காக அதிகமாக ஜெபிக்கிறோம். இயேசப்பா ஜெபத்தை கேட்பாங்கதானே! அவர் இல்லாம நம்மால ஒண்ணுமே செய்ய முடியாது. என்ன ஆச்சரியமா இருக்கிறதல்லவா? நம்மை இதுவரை பாதுகாத்து நடத்திய இயேசப்பாவுக்கு கைகூப்பி நன்றி சொல்வோமா? Ok கதை கேட்க ரெடியா?
ஒரு அழகான பூந்தோட்டம் இருந்தது. நல்ல வாசனை தரக்கூடிய, வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. அந்த தோட்டத்தைக் கடந்து போகிற எல்லாரும் நின்று பார்த்து ரசிக்கக் கூடிய அழகான தோட்டம். நீங்களும் இப்படிப்பட்ட ரோஜாப்பூ தோட்டம், Sunflower தோட்டம் பார்த்திருக்கீங்களா? அதுமட்டுமா? தோட்டத்துக்குள்ளே இறங்கி Photo, செல்பி எல்லாம் எடுத்து friends கிட்ட காட்டி மகிழ்வீங்க தானே! ஆண்டவரோட படைப்பே அழகுதான்!
அந்த தோட்டத்திலேயும் தோட்டக்காரர் செடியின் வளர்ச்சியைக் கவனித்துப் பார்த்து ரசிப்பார். அந்தச் செடி வளர்ந்து பூ பூக்க ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில் பூச்சி வந்து அந்தச் செடியை அரித்துப் போட்டுவிடும். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போனது. தோட்டக்காரருக்கு ஒரு யோசனை வந்தது. இனிப்பு கலந்த பூச்சி மருந்தை அந்தச் செடியின்மேல் தெளித்து விட்டார். இரவு நேரத்தில் விஷபூச்சி வந்து செடியைக் கடித்தது. இனிப்பான அந்த மருந்தையும் தின்றது. சிறிது நேரத்தில் செத்துக் கீழே விழுந்தது. சில நாட்களில் செடி நன்றாக வளர்ந்து பலன் கொடுத்தது. தோட்டக்காரருக்கு அளவிட முடியாத சந்தோஷம்!
குட்டி பிள்ளைகளே, நீங்களும் வளர்ந்து, விவரம் அறியும் வயது வரும்போது, உங்களை நல்ல பிள்ளையாக இருக்கவிடாதபடி பிசாசு உங்களை பாவம் செய்ய தூண்டுவான். இனிப்பு கலந்த விஷம் போல, பாவ சந்தோஷத்தைக் கொடுப்பான். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்கள் நற்பெயரைக் கெடுத்து, உங்க வாழ்க்கையையே அழித்து விடுவான். அழகிய பூந்தோட்டம் போல இருக்கும் வாழ்க்கையை அலங்கோலமாக்குவது தான் பிசாசின் தந்திரம். பாவத்தை விட்டு விலகணும்னா இயேசப்பா உங்க கூட இருந்தா தான் முடியும். உங்க நல்ல செயல்கள் மூலமா இயேசப்பாவுக்கு பிரியமான பிள்ளையாய் வாழ அர்ப்பணிப்பீர்களா? இயேசப்பா உங்க கூட இருந்தா எப்போதும் உங்க வாழ்வு, பூ பூத்து, கனி தந்து மற்றவர்களை மகிழ்விக்கிற பயன்படுகிற வாழ்வா இருக்கும். Ok.
- Sis. தெபோராள்
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250