Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-08-2022 (Youth Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 07-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 08-08-2022 (Youth Special)

 

எந்த சத்தம் கேட்கிறது?

 

“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.” – சங்கீதம் 127:5 

 

இந்த வாலிப வயதில் சாத்தான் நம் வாழ்க்கையில் இந்த உலகத்தின் சத்தத்தை அதிகமாகக் கேட்கிற மாதிரி நம் காதுகளை அதன் பக்கம் திருப்பி விடுவான். உலகத்தின் சத்தத்தைக் கேட்டால் அது என்ன செய்யும்?

 

1. Life ல Focus இல்லாமலே ஓடிட்டே இருப்போம்.

 

2. நம் சிந்தையில் அசுத்தமான காரியங்களை சிந்திக்க வைக்கும்.

 

3. நம்மை கர்த்தருக்குள் வரவிடாமல் நமக்கு யாருமே இல்லைன்னு நினைக்க வைக்கும்.

 

4. பொய்யான அன்பில் நம்மை சிக்க வைக்கும்.

 

5. மாயையான இந்த உலகத்தின் காரியங்கள் தான் உண்மையானது என்று நம்மையே நம்ப வைக்கும்.

 

6. கர்த்தருக்குள்ள நீங்க யாருன்னு யோசிக்க விடாது.

 

வாலிப வயதில் உலகத்தின் சத்தம் நம்மை அதிகமாக ஆட்கொள்ளும்படி சத்துரு நயவஞ்சகமாய் பல சீர்கேடுகளின் மூலமாய் உங்களை ஏமாற்றுவான். இந்த உலகத்தின் சத்தத்திற்கு நீங்க Pause button Press பண்ணும் போதுதான் நம் ஆண்டவரின் சத்தத்தைக் கேட்க முடியும். 1இராஜா. 19ம் அதிகாரத்தில் தேவன் எலியாவோடே பேசின போது, முதலில் வந்த பெரிய இரைச்சலின் சத்தங்களில் தேவன் இருக்க வில்லை. மாறாக அமர்ந்த மெல்லிய சத்தத்திலே பேசினார் என்று வாசிக்கிறோம். அதேபோல் தான் நம்மோடும் மென்மையான ஆண்டவராய் மெல்லிய சத்தத்தோடு பேசுகிறார். எனவே Tune your ears to hear God’s word. நம்ம யாரோட அதிகமா நேரம் செலவழிக்கிறோமோ அவங்க சத்தம் நமக்கு பரிச்சயமா இருக்கும். ஆண்டவரோடு நீங்க அதிக நேரம் செலவழிக்கக் கற்றுக் கொண்டால், அவருடைய மெல்லிய சத்தத்தை நீங்கள் உணர முடியும்.

 

வாலிபப்பிள்ளைகள், பலவான்கள் கையில் இருக்கிற அம்புகள் போல என்று ஆண்டவர் சொல்லியிருக்காங்க. உங்களைக் கொண்டு கர்த்தர் இந்த தேசத்தை அசைக்க விரும்புகிறார். பெரிய அற்புத அடையாளங்களை இந்த உலகத்திலே செய்ய கர்த்தர் உங்களை பயன்படுத்த விரும்புகிறார். Miss பண்ணிடாதீங்க. சத்துரு சொல்ற உலக சத்தத்தைக் கேட்காதீங்க. கர்த்தர் உங்களை மேன்மையாக வைக்க, உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைக்க ஆயத்தமாய் வல்லவராய் இருக்கிறார். எனவே அன்பு வாலிப தங்கச்சி, நீ உன் செவியை கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க பழக்குவித்தால் நீ இந்த புவியை ஆளலாம்.

- Mrs. திவ்யா பெர்னார்ட்       

 

ஜெபக்குறிப்பு:

நமது பணித்தளங்களில் நாம் சந்திக்கிற கிராமங்களில் திரளான ஆத்துமாக்களை கர்த்தர் தர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş