Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29-07-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 28-Jul-2022

இன்றைய தியானம்(Tamil) 29-07-2022

 

நன்றியுள்ளவர்களாய் இருங்கள் 

 

“...ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” - கொலோசெயர் 3:15

 

உலகக் கால்பந்துக் கோப்பை இறுதிப்போட்டியில், ஜெர்மனி அர்ஜென்டினாவை வென்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டு அணி வீரர்களும் திறமையாக விளையாடினர். ஆனால் கூடுதல் நேர விளையாட்டில் ஜெர்மனி வீரர் மரியோ கோல் அடித்து, வெற்றியை தன் நாட்டுவசமாக்கினார். இவர் தன்னுடைய முகநூல் பகுதியில் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்திப் பதிவிட்டிருந்தார். “தேவனே! உம்மிடம் நான் எதையும் கேட்கவில்லை. ஆனால் நீர் கொடுத்திருக்கிற அனைத்திற்காகவும் நன்றி சொல்கிறேன்” என்று கூறியிருப்பது ஆச்சரியமே!

 

மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் யோசபாத்திற்கு விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். அப்பொழுது யோசபாத்துடன் இருந்த யூதா ஜனங்கள் அனைவரும் கூடி தேவனைத் தேடினார்கள். அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டு, தேவனைத் துதிக்கத் தொடங்கினார்கள். அப்பொழுது மோவாப் புத்திரரும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டுண்டு விழுந்தார்கள் (2நாளா. 20:1-20). இந்த யோசபாத் ராஜா, யூதா ஜனங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்தோத்திரம் செலுத்தினார்கள். இயேசு, ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது குஷ்டரோகமுள்ள 10 பேர் அவருக்கு எதிராக வந்து, “இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும்” என வேண்டிக்கொண்டார்கள். உடனே இயேசு அவர்கள் 10 பேருக்கும் சுகத்தைக் கொடுத்தார்.அதில் ஒருவர் மாத்திரம் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தும் விதமாக இயேசுவுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான். அப்பொழுது இயேசு “சுத்தமானவர்கள் 10 பேரல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே?” எனக் கேட்கிறார். அப்படியென்றால் இயேசுவும் நன்றி எதிர்பார்த்துக் கேட்கின்றார் என நாம் அறியலாம்.

 

இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்படுகிற அந்த நேரத்திலும், பாத்திரத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி, சீஷர்களுக்குக் கொடுத்ததாக நாம் வாசிக்கிறோம். இயேசு எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்து, நமக்கு முன் வாழ்ந்து காட்டியுள்ளார். நாம் நம்முடைய எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யவேண்டும். அப்படித்தான் வேதம் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் (சங்.50:23) என நாமறிவோம். எனவே நாம் எல்லாக் காரியங்களிலும், எல்லா நேரங்களிலும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தக் கற்றுக் கொள்வோம். நிறைவான நேரங்களில் மாத்திரமல்ல, குறைவான நேரங்களிலும், வாழ்க்கையின் பற்றாக்குறையான சமயங்களிலும், ஆசீர்வாதங்கள் இருக்கின்றதோ இல்லையோ, முதலாவதாக நாம் ஸ்தோத்திரம் செய்யப் பழகுவோம். அதுவே நமக்கு ஏற்றது.

- Mrs.சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

தமிழ்நாட்டில் ஆலயமில்லாத கிராமங்களில் 1000 ஆலயங்கள் கட்டுவதற்கென எடுக்கப்படும் பிரயாசங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al