By Village Missionary Movement
Sunday, 24-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 24-07-2022 (Kids Special)
எனக்காக
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;...” - சங்கீதம் 138: 8
ஒரு அடர்ந்த காட்டில் எல்லா விலங்குகளும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். காட்டுக்கு ராஜா யார்னு கேட்டால், சிங்கம்-னு சொல்லிருவீங்க, இல்லையா? அந்த காட்டில் சிங்க ராஜா ரொம்ப நல்ல ராஜாவாய் இருந்தது. எந்த விலங்குகளையும் அடித்துச் சாப்பிடாமல், தியாகமாக செத்துப்போன விலங்குகளை மட்டுமே சாப்பிடும். தன்னுடைய காட்டிலுள்ள விலங்குகளோடு ஐக்கியமாக இருந்தது. ஆனாலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததால் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஆயத்தம் செய்தது. அந்தக் காட்டில் வேட்டையாட வரும் “வேடனை எப்படி விரட்டுவது“ என்று ஒவ்வொரு விலங்கும் பேசிக்கொண்டன. வித விதமான ஆலோசனைகள் சொல்லப்பட்ட போதும் சிங்க ராஜாவுக்கு திருப்தியில்லை. நமது காட்டிலுள்ள விலங்குகளை எப்படியும் காப்பாற்ற வேண்டுமே என்று ஒரு முடிவுக்கு வந்தது சிங்க ராஜா.
“நாளை வேட்டைக்காரன் வருமுன்னே இந்த செடிகளுக்கிடையில் ஒளிந்து கொள்ளுங்கள், வேட்டைக்காரன் முன்னே ஒரு விலங்கு மட்டுமே தனியாகச் செல்ல வேண்டும். வேடனின் குறி அந்த விலங்கின் மீது வரும்போது நாம் எல்லோரும் ஒரே பாய்ச்சலாக தாக்கிவிட வேண்டும். உங்களில் யார் அந்த வேடன் முன்னே தைரியமாகச் செல்வது” என்று சிங்க ராஜா கேட்டதும் ஒரே நிசப்தம் “சரி நான் எனது ஒரே சிங்கக்குட்டியை வேடன் முன்னே அனுப்புகிறேன்” என வாக்குக் கொடுத்தது சிங்க ராஜா. கூட்டம் முடிந்து எல்லா விலங்குகளும் கலைந்து சென்றன.
அடுத்த நாள் எல்லா விலங்குகளும் திட்டமிட்டபடியே தயாராக நின்றன. வேட்டைக்கரனும் வந்தான், சிங்கக்குட்டி தைரியமாக அவன் முன்னே சென்றது. ஆகா! இன்று வந்தவுடன் சரியான வேட்டைதானென்று நினைத்து அம்பை எய்தான். குறி தவறாமல் குட்டியின் மேல் பாய்ந்தது அம்பு. மறைந்திருந்த விலங்குகள் வேடனை அடித்துக் கொன்றன. ஆனால் சிங்கக் குட்டி இறந்துபோனதை நினைத்து விலங்குகள் வருத்தமடைந்தன. ராஜா தன் குட்டியை இழந்தாலும் காட்டிலுள்ள விலங்குகள் காப்பாற்றப்பட்டதை நினைத்து ஆ றுதல் அடைந்தது.
அருமையான தம்பி – தங்கையே காட்டிலுள்ள விலங்குகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென நினைத்து, தன் ஒரே குட்டியை இழந்த சிங்க ராஜாவைப்போல, பிதாவும் நாம் சந்தோஷமாக இருக்கவும், அவருக்கு பிரியமான பிள்ளையாய் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டுமென்று தன் ஒரே குமாரனாம் இயேசு கிறிஸ்துவை பலியாகக் கொடுத்தார். உனக்காக சிலுவையில் யாவையும் செய்து முடித்த இயேசப்பாவுக்கு நீயும் ஏதாவது செய்ய வேண்டும். என்ன குட்டீஸ், செய்வீங்கதானே!
- Mrs. சித்ரா ஜான்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250