Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-07-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 10-Jul-2022

இன்றைய தியானம்(Tamil) 10-07-2022 (Kids Special)

 

கீழ்ப்படியா Duckling   

 

“...தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.” – சங்கீதம் 32:5

 

ஒரு அழகான வாத்து தன் மூன்று குஞ்சுகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. Evening time-ல தண்ணீரிலே விளையாட, சாப்பிட, ஜாலியா enjoy பண்ண, அம்மா வாத்து தன் குஞ்சுகளை அழைத்துச் செல்லும். நீங்களும் விளையாட Park-குக்குப் போவீங்க. அப்பா, அம்மாவுடன் கூட கடைக்கு போவீங்க தானே. அப்படி போகும் போது சொன்ன பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாய் இருக்கணும். Ok- வா? அந்த குஞ்சுகளில் ஓன்று ரொம்ப சேட்டை பண்ணும். சரி வாங்க. நேரம் ஆயிடுச்சு, வீட்டுக்கு போவோம்னு அம்மா கூப்பிட்டா, சேட்டை பண்ணுற வாத்து குஞ்சு மட்டும், “இதோ வரேன்மா கொஞ்ச நேரம் மட்டும்“ என்று விளையாடிக் கொண்டிருக்கும். “நீ தனியா இருந்தேன்னா நாய், நரியெல்லாம் வந்து கடிச்சிடும், அம்மா கூட இருப்பது தான் பாதுகாப்பு” ன்னு சொல்வதையெல்லாம் காதிலே வாங்காததைப் போலிருக்கும்.

 

தாமரை இலைகளுக்குள் தன்னை மறைத்து கொண்டு, காணாமல் போனதை போல் இருந்துகொள்ளும் அந்த சேட்டைக்கார குட்டி வாத்து. ஒருநாள் night ஆனதாலே அம்மா வாத்து வீட்டுக்கு கிளம்பவும் மற்ற 2 வாத்து குஞ்சுகள் எல்லாம் பின்னாடியே போய்விட்டது. இது மட்டும் “நம்ம கொஞ்ச நேரம் கழித்து போவோம். வேகமாக போய் அம்மாவை பிடித்துவிடலாம்“ என்று ஜாலியா நீச்சல் அடித்துக்கொண்டும், குட்டி மீன்களைச் சாப்பிட்டுக் கொண்டும் சந்தோஷமாக இருந்தது. தீடீரென்று நரி ஊளையிடும் சத்தம் கேட்டவுடன் பயம் வந்தது.

 

ஐயோ! அம்மா சொன்ன பேச்சைக் கேட்காம மாட்டி கொண்டோமே! அவ்வளவு தான். இன்றைக்குச் செத்தேன் போலப்பா, என்று பயந்து கொண்டிருக்கும் போது, ஒரு யோசனை வந்தது. சரி நம்ம God கிட்ட Prayer பண்ணுவோம்னு நினைச்சு “என்னை காப்பாத்துங்க Jesus இனி கீழ்ப்படிந்து நல்ல பிள்ளையாய் இருப்பேன், எனக்கு உதவி செய்யுங்க” ன்னு Pray பண்ணிச்சு. அழகா விரிந்திருந்த தாமரை பூக்களுக்குள்ளே போய் உட்கார்ந்ததும், அந்தப் பூ அப்படியே மூடிக்கொண்டது. காலையில் சூரியக் கதிர்கள் தாமரை பூவின் மேல் பட்டதும் super – ஆக அந்த பூ விரிந்தது. கண் திறந்து பார்த்த வாத்து குஞ்சு, தான் பத்திரமாய் காப்பாற்றப் பட்டதை நினைத்து Jesus –க்கு நன்றி சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்குச் சென்று, அம்மா சொன்ன பேச்சை கேட்டுக் கீழ்ப்படிந்து நல்ல பிள்ளையா இருந்தது.

 

அன்பு தம்பி – தங்கச்சி, கீழ்ப்படியாதது பாவம் தானே! ஆமா இதெல்லாம் ஒரு பாவமா? அப்படின்னு நினைக்கக் கூடாது. பாவம் பயத்தைக் கொண்டு வரும், பயம் சந்தோஷத்தை இழக்கச் செய்யும். இயேசப்பாவின் இரத்தம் உன் பாவத்தை Delete பண்ணிடும். நீ Jesus - கிட்ட Chat பண்ண ரெடியா?... 

- Mrs.ஜாஸ்மின் சாமுவேல்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al