By Village Missionary Movement
Sunday, 03-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 03-07-2022 (Kids Special)
Good Friend
“சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்;...” - நீதி.18:24
Hello Friends! புது Class, புது Teacher, புது நண்பர்கள், School Life Super-ரா போகுதா? Jesus-க்கு Thank you சொல்லணும்! நீங்க Schoolக்குப் போகும்போது இயேசப்பாவையும் கூட்டிக்கொண்டு போகணும். அப்போ உனக்கு ஆசீர்வாதமாக இருக்கும். நீ காலையிலிருந்து Evening வரையும், School-ல் தானே இருக்கிறாய்... அதுக்கப்புறம் Tuition போனாலும், அங்கேயும் நண்பர்கள் கூட்டம்தான். ஆனா நல்ல நண்பர்கள் கிடைக்கணும் இல்லையா? Friend இல்லன்னா வாழ்க்கையே போரடிக்குந் தானே. So, நல்ல நண்பர்களை தெரிந்தெடுத்துக்கோ... Ok.
Bible-ல யோசேப்பு என்ற அண்ணன், செய்யாத தவறுக்காக சிறையில் அடைக்கப்பட்டாங்க. அதே சிறையில் ராஜாவுக்கு சாப்பாடு கொடுக்கிற பானபாத்திரக்காரனும் இருந்தாங்க. இவர் தான் கண்ட கனவுக்கு அர்த்தம் தெரியாமல் கவலையோடு இருந்தார். அவரை யோசேப்பு விசாரித்து ஆண்டவர் கிருபையால் கனவுக்கு அர்த்தம் சொல்லி, நல்ல நண்பர்களாக இருந்தாங்க. ஜெயில்ல இருந்தாலும் யோசேப்பு அண்ணன் Happy- யா இருந்தாங்க. ஏன் தெரியுமா? இயேசப்பா அவங்க கூடவே இருந்தாங்க. அப்புறம், அண்ணன் நண்பர்களை விசாரித்து உதவி செய்தாங்க. யோசேப்பு அண்ணன் சொன்னது போலவே, அவர் Friend ராஜாவுக்கு சாப்பாடு கொடுக்கின்ற அந்த வேலையில் அமர்த்தப்பட்டார். ஒருநாள் இராஜாவும் தான் கண்ட கனவினால் கலங்கிப்போய் இருந்தார். மந்திரவாதிகள், சாஸ்திரிகள், யாராலும் அர்த்தத்தைச் சொல்ல முடியவில்லை. உடனே அந்த Friend-க்கு யோசேப்பின் ஞாபகம் வந்தது. ராஜாவின் கனவுக்கு அர்த்தம் சொல்லி, என்னை விட பெரிய ஆளாக வந்துவிடுவானோ என்று பொறாமைப்படாமல், யோசேப்பைப் பற்றி இராஜாவிடம் சொன்னான். நல்ல நண்பன் எப்போதும் உண்மையாக நேசிப்பான். இதன் மூலம் யோசேப்பு, ராஜாவுக்கு அடுத்த தலைவராய் உயர்த்தப்பட்டார். யோசேப்பின் உயர்வுக்கு அந்த நண்பர் காரணமாய் இருந்தார் பார்த்தாயா?
குட்டிச் செல்லங்களே! இயேசப்பா உங்களை உண்மையாய் நேசிக்கின்றதைப்போல் நீங்களும் உங்க Friend-ஐ உண்மையா நேசிக்கணும். அப்படி நல்ல Friends கிடைக்கணும்னு இயேசப்பாகிட்ட கேட்கணும். தேவைக்கு மட்டும் Use பண்ணிட்டு, நண்பர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது. என்ன குட்டீஸ், Okதானே!
- Sis.தெபொராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250