By Village Missionary Movement
Thursday, 30-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 01-07-2022
VOTE OF THANKS
“...நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” - கொலோசெயர் 3:15
பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில் நடைபெறும் விசேஷித்த விழாக்களில் நிகழ்ச்சி நிரலின் இறுதியில், Vote of Thanks என்ற ஒன்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த Vote of Thanks –ல் நிகழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள், பொறுப்பாளர்கள் எனப் பல தரப்பட்டவர்களுக்கு நன்றி கூறப்படும். இதுவே Vote of Thanks.
பரிசுத்த வேதாகமத்தில் தாவீது என்ற பக்தன் அநேக விதமான சங்கீதங்களை பாடலாகப் பாடியுள்ளார். அதில் ஒன்றுதான் நன்றி சொல்லும் விதமாகப் பாடின 103ம் சங்கீதம், “என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என்று பாடுகிறார். தாவீதின் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், எதிரிகளின் பின் தொடரல்கள் இருந்தன. இதன் மத்தியில்தான் தாவீது நன்றி கூறிப் பாடுகிறார், “சகல உபகாரங்களையும் மறவாதே” என்று. தாவீது கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி சொல்கிறார்!
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! இந்த வருடத்தின் 6 மாதங்கள் நம்மைப் பாதுகாத்த அவருக்கு நன்றியுள்ள இருதயத்தோடு நன்றி செலுத்துவோம்! வருடத்தின் துவக்கத்திலிருந்து இந்நாள் வரை அவர் நம்முடைய ஆத்துமாவிற்கும், சரீரத்தின் தேவைகளுக்கும் எத்தனை நன்மைகளைச் செய்திருக்கின்றார்! நம்மையும் நம் குடும்பத்தாரையும் கொடிய வியாதியிலிருந்து பாதுகாத்தாரே. “இனி அவ்வளவுதான், முடிந்தது” என நாம் நினைத்த பல நேரங்களில் ஆரம்பத்தைக் கொடுத்தாரே! இப்படிப்பட்ட பலவிதமான நன்மைகளுக்காகவும் நன்றியுள்ள இருதயத்தோடு அவருடைய பாதத்தில் அமர்ந்து நன்றி சொல்லுவோம். அவர் வழி நடத்தி வந்த எல்லா உபகாரங்களுக்காகவும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டவர்களாய் இருக்கின்றோம். சாதாரண மனிதர்கள் நமக்கு உதவி செய்யும்போது நன்றி என்று கூறும் நாம், வானத்தையும் பூமியையும் தம் வார்த்தையினால் படைத்த தேவனுக்கு எத்தனை எத்தனை நன்றிகளைச் செலுத்த வேண்டும் என்று சற்று சிந்திப்போம்! நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கப் பழகுவோம்.
- Mrs.சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் அனைத்து ஊழியங்களிலும் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250