By Village Missionary Movement
Sunday, 26-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 27-06-2022
Holy தான் Jolly
“...நான் பரிசுத்தர்; ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” - லேவியராகமம் 11:45
என் அன்புத் தங்கச்சி, இந்த இருளான உலகத்துல பரிசுத்தமா வாழ முடியுமா என்று நினைக்கிறாயா? கண்டிப்பா முடியும்! “நான் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நான் Bangalore-க்கு வேலைக்குச் செல்லும்போது, என் கூட என்னோட அப்பா, அம்மா இல்ல, நான் எப்படின்னாலும் இருந்திருக்கலாம். எனக்கு எல்லா சினிமா Songs-ம் மனப்பாடமாகத் தெரியும். எல்லாக் காலத்துப் பாட்டும் தெரியும். நடுவுல இருந்து ஒரு Line- சொன்ன, அது என்ன பாட்டுன்னு சொல்லிடுவேன். என் Friends ஆச்சரியப்பட்டாங்க. சில நாட்களிலேயே கர்த்தர் எனக்கு முன்குறித்த நண்பர்களை கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமா நான் இயேசப்பாவைப் பற்றி அறிய ஆரம்பித்தேன், இரட்சிக்கப்பட்டேன். அதன் பின் சினிமா பாட்டைக் கேட்பதும், பார்ப்பதும் தவறல்ல என்ற எண்ணம் மாறியது! கர்த்தரை துதிக்கின்ற வாயினால், நான் சினிமா பாடல்களை பாடக்கூடாது என்று ஆவியானவர் உணர்த்தினார்! ஆனாலும் இயேசப்பா என் மேல் கோபமாகி, என்னைத் தண்டிக்கவில்லை. மென்மையான ஆவியானவராய் எனக்கு அந்த உணர்த்துதலைக் கொடுத்தார்! என்னையே அறியாமல் பாடல் வரிகள் கூட முழுவதுமாக எனக்கு மறந்து போயிடுச்சு! நான் எந்த Effort-ம் எடுக்கல, மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தேன்; அவ்ளோதான். அதுக்கப்புறம் சினிமா பாட்டை பாடணும் என்ற எண்ணமே வரல. நீங்க கேட்கலாம் “சினிமா பாட்டை ஏன் பாடக்கூடாது? அதில் என்ன தப்பு? வெறும் Song தானே?” என சொல்லலாம். சொல்கிறேன் கேளுங்க...
ஆண்டவரைத் துதித்துக் கொண்டிருந்த தூதர்களிலே, விழுந்துபோன தூதன்தான் “லூசிபர்” அவன் Music-ல பெரிய ஆள். இந்த சினிமா Music-ஐ கேட்கும்போது, சாத்தான் நமக்குள்ள தேவையற்ற கிரியைகளாகிய Lust, Love Emotions-ஐ கொண்டு வருவான். அது First நம்ம Mind-ஐ தான் Affect பண்ணும். பாவம் முதலாவது கர்ப்பம் தரிக்கின்ற இடம் நம்ம Mind தான். நம்மள அறியாம, நாம் அந்த Sin-க்கு அடிமையாவோம். இந்தச் சின்ன பாவம்தான், வாலிபப் பிள்ளைகளை “Pornography” என்கிற பெரிய துணிகரமான பாவத்திற்குள் தள்ளிவிடுகின்றது. வாலிபப் பிள்ளைகளாகிய உங்களுக்கு நான் சொல்ல நினைக்கின்ற சின்ன Practice என்னவென்றால், உலக பாவ சிற்றின்பங்களை அனுபவிப்பதைவிட “Holy Life தான் Jolly Life” என்ற உண்மையை உள்ளத்தில் எழுதிக்கொள்ளுங்கள். பரிசுத்தமாய் வாழ பரிசுத்தரின் கையில் உங்களை ஒப்புக்கொடுப்பீர்களானால், கர்த்தர் ஏற்ற நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்த்தியான காரியங்களைச் செய்வார்.
- Mrs.திவ்யா பெர்னார்ட்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்களுக்கு அனுபவமுள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250