By Village Missionary Movement
Sunday, 26-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 26-06-2022 (Kids Special)
திருந்திய உள்ளம்
“என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்” - சங்கீதம் 35:9
Hello குட்டீஸ், How are you? தினமும் காலையிலேயே எழுந்து, சுறுசுறுப்பாய் கிளம்பி, School-க்கு போக Home Work பண்ண இப்படி ரொம்ப Busy- ஆக இருப்பீங்க இல்லையா? Very Good. நல்ல Friends கூட சேர்ந்து சந்தோஷமாக விளையாடி, நன்றாக படித்து, நல்ல பிள்ளை என்று பேர் வாங்கணும். அது தான் ஆண்டவரோட ஆசையும் கூட! Ok-வா குட்டீஸ், கதை கேட்போமா?
ராணி அம்மாவுக்கு, மணி என்ற ஒரு பையன் இருந்தாங்க. இவன் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து திருடுவது, பொய் சொல்லுவது, இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களை தைரியமாய் செய்தான். மிகவும் வேதனைப்பட்ட அம்மா, வேதத்திலிருந்து அறிவுரை சொன்னாலும் அதை மணி கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்பதில்லை. பணம் நம் கையில் இருந்தால் போதுமென்று நினைப்பான். தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் தானே! மணி திரும்பத் திரும்ப செய்த திருட்டுத்தனத்தால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். அங்கேயும் போய் மணி திருந்துவதாக இல்லை. அம்மாவுக்கு கடிதம் எழுதினான். “எனக்கு 500 ருபாய் பணம் தேவைப்படுகின்றது, அனுப்பிவிடுங்கள்” என்று எழுதியிருந்தான். சிறைச்சாலையில் பணம் எதற்கு என அம்மா யோசித்தாலும், மகன் மீது இருக்கின்ற பாசத்தில், ஒரு பைபிள் ஒன்றை வாங்கி அதில் 5 இடங்களில் 100 ருபாய் வீதம் 500 ரூபாயை வைத்து, கடிதம் ஒன்றை எழுதி பார்சல் பண்ணி அனுப்பினார்கள். அந்த பார்சல் சிறை அதிகாரியால் பிரித்துப் பார்க்கப்பட்டு, மணி கையில் கிடைத்தது. முதலாவது அம்மாவின் கடிதத்தைப் படித்தான். “மகனே நான் உனக்காக ஜெபிக்கிறேன். நீயும் தினமும் இந்த வேதத்தை வாசித்து ஜெபிக்க மறக்காதே” என்று எழுதியிருந்தார்கள். 500 ரூபாய் பணம் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருப்பார்கள் என்று நினைத்த அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கோபத்தோடு பைபிளை ஒரு ஓரத்தில் வைத்து விட்டான். 6 மாதம் கழித்து மணி விடுதலையடைய வேண்டிய நாள் வந்த போது, அம்மாவும் மகனை அழைத்துச் செல்ல ஆசையோடு வந்தார்கள். “மணி வேதத்தை வாசித்தாயா? நீ வாசித்து இருந்தால் ஆண்டவர் உன் இருதயத்தில் பேசியிருப்பாரே? நீ விரும்பிய 500 ரூபாயும் உனக்குக் கிடைத்திருக்குமே” என்றார்கள். அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான் அம்மாவை! “மகனே, நீ கேட்ட 500 ரூபாயை பைபிளில் வைத்திருந்தேனே, பார்க்கவில்லைய?” என்றார்கள். “வேதம் தான் உன் வாழ்வை மாற்றும், வேதத்தில் தான் உனக்கு ஆசீர்வாதம் உண்டு மகனே” என்றார் கண்ணீருடன்... மணியின் உள்ளத்தில் மாற்றத்திற்கான விதை விழுந்ததை, அவன் முகத்தில் காண முடிந்தது. தன் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பினான். நீங்களும் உங்க பாவத்தை இயேசப்பாகிட்ட சொல்லி இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்றுக் கொள்ள ரெடியா?
- Mrs. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250