Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-06-2022
Share:

By Village Missionary Movement

Friday, 24-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 25-06-2022

 

நீ தூரமானவனல்ல 

 

“அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார்...’’ - மாற்கு 12:34 

 

ஒரு வேதபாரகர் நமதாண்டவரிடம் வந்து, “கற்பனைகளிளெல்லாம் பிரதான கற்பனை எது’’ என்று கேட்டான். “தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு கூருவாயாக” என்று பதிலளித்தார். அவர் கூறியதற்கு அந்த மனிதன் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. (இதனால் தான் இயேசு நீ தேவனுடைய ராஜ்யத்துக்கு தூரமானவனல்ல என்று கூறினார்). வேதத்தில் இயேசு கிறிஸ்து சிலரைக் கடிந்து கொண்டதைப் பார்க்கிறோம். ஆனால் இம்மனிதனையோ அவர் கண்டனம் செய்யவில்லை. ஆதலால் அவன் மற்ற பரிசேயரையும், வேதபாரகரையும் விட சிறந்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதிலும் அங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அதிலும் அங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அவன் தேவனுடைய அரசுக்குள் இல்லை. அதின் அருகில் தான் இருந்தான். ஆம் இந்த மனிதனுக்குள் இருந்த விசுவாசம் அவனுடைய இருதயத்தில் அல்ல அது மூளை அளவில் தான் இருந்தது. வேத வசனம் நம் அறிவில் இருந்தால் போதாது. அது இருதயத்திற்குள்ளிருந்தால் மட்டுமே கிரியை செய்து நித்தியத்திற்கு நேராய் வழிநடத்தும்.

 

நோவா காலத்தில் வெள்ளம் நேரிடுவது சாத்தியம் என்று மக்கள் நினைக்கவில்லை. பாவத்தை விட்டு மனந்திரும்பும்படி நோவா பிரசங்கித்தான். (2பேதுரு 2:5) அவர்கள் அவனை பைத்தியம், மூளை மழுங்கிவிட்டெதென்று நினைத்தார்கள். பேழையில் தச்சுவேலை பார்த்தவர்கள் அங்கிருந்திருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்களும் நோவாவின் எச்சரிப்புக்குச் செவி சாய்க்கவில்லை வெறும் கூலிக்காக மட்டுமே உழைத்தார்கள். வெள்ளம் வந்தபோது பேழைக்கு அருகே நீந்தியவர்கள் கட்டாயம் பேழையின் கதவை தட்ட முயற்சித்திருப்பார்கள். கதவு திறக்கப்படவில்லை. ஏனெனில் பேழையின் கதவு நோவாவினால் அல்ல, அது தேவனால் அடைக்கப்பட்டிருந்தது. ஜனங்களுக்கும், பேழைக்கும் வெகு தூரமில்லை. ஆனாலும் அந்தோ பரிதாபம்! 

 

பிரியமானவர்களே! மேற்கண்ட இரு வேதாகம சம்பவங்கள் மூலமாக நம்மை ஆராய்ந்து பார்ப்போம். கடவுளின் அரசிற்கு அருகில் இருக்கிறோமா? அல்லது அதற்குள்ளிருக்கிறோமா? நம்முடைய மூளையிலிருக்கும் வேதவசனங்கள் வாழ்வில் வெளிப்படவில்லை என்றால், நாம் தேவராஜ்யத்திற்க்கு வெளியில் தான் இருக்கிறோம். தூரமானவர்களல்ல என்றாலும் தேவராஜ்யத்திற்குள் இல்லை என்பது பரிதாபமே! ஆகவே அறிந்திருக்கிற வேத வசனங்களுக்கும், எச்சரிப்புகளுக்கும் செவிசாய்த்து நம் வாழ்வை தேவனுக்கு நேராய் திருப்பி ஆசீர்வாதம் பெறுவோம்.

- Mrs.ஹெப்சி மனுவேல் ஜெயராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

“கண்மணியே கேள்’’ பத்திரிக்கை ஊழியத்தின் மூலம் அநேக வாலிபப் பெண் பிள்ளைகள் எழுப்புதலின் கருவிகளாக உருவாக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al