Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-06-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 23-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 24-06-2022

 

விலைக்கிரயம்

 

“…கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே...’’ -1 கொரிந்தியர் 6:20 

 

ஒரு சிறுவன் இருந்தான். அவன் வீட்டின் அருகில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. தினமும் பள்ளிக்குச் சென்று திரும்பியவுடன், மிகவும் கடின பிரயாசப்பட்டு மூங்கில் குச்சிகளால் தான் செய்து வைத்திருந்த படகை அலமாரியில் இருந்து எடுத்து, அந்த ஆற்றில் விட்டு விளையாடுவான். பின்னர் அந்த படகை வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கமாயிருந்தது. ஒரு நாள் வழக்கம் போல் அழகான படகை அலமாரியிலிருந்து எடுத்து ஆற்றில் விட்டான். நீரோட்டம் அதிகமாக இருந்தபடியால், படகை நீர் அடித்துச் சென்றது. அவன் மிகவும் வருந்தினான்.

 

பின் ஒருநாள் கடைத் தெருவுக்குச் சென்றபோது, அங்கு ஒரு கடையில் அவனது படகு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான். கடைக்காரரிடம் அந்தப் படகை திரும்பத் தரும்படி வருந்தி கேட்டான். ஆனால் அவரோ அவன் சொல்வதை கேட்பதாயில்லை. விலை தந்தால் தான் தருவேன் என்றார். சிறுவன் வீட்டிற்கு சென்று தான் சிறிது சிறிதாய் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துவந்து அந்தப் படகை விலை கொடுத்து வாங்கிச் சென்றான். செல்லும் வழியில் படகை முத்தமிட்டு, நீ இரண்டு வழியில் எனக்கு சொந்தம். ஒன்று நான் தான் உன்னை உருவாக்கினேன். மற்றொன்று நான் உன்னை மீண்டும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன் என்றான்.

 

வேதத்தில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இதைப் போலவே, ஒரு உவமையைக் கூறியுள்ளார். (மத்தேயு.18:10-13) ஒரு மனிதனுக்கு100 ஆடுகள் இருந்தது. அதில் ஒன்று காணாமல் போய்விட, அந்த ஆட்டின் மேய்ப்பன் தன்னோடிருந்த 99 ஆடுகளையும் விட்டுவிட்டு காணாமற்போன அந்த ஒற்றை ஆட்டை தேடிச்சென்று, ஆடு கிடைக்கும் வரை ஓய்ந்திராமல் தேடினான். கிடைத்த உடன் மிக்க மகிழ்ச்சியோடு அதை தன் தோளில் போட்டுக் கொண்டு திரும்பி வருவான் எனக் கூறியுள்ளார்.

 

ஆம் பிரியமானவர்களே, நாமும் கூட காணாமற்போன இந்த ஒற்றை ஆட்டைப் போன்றவர்கள் தான். ஆண்டவர் நம்மை படைத்து, நமக்கு சுவாசம் தந்து, அவரைத் துதிக்கும் படி உண்டாக்கினார். ஆனால், நாமோ, உலக சிற்றின்பங்களை நாடி வழி மாறி சென்றுவிடுகிறோம். அந்த சிறுவனின் படகு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது போல நாமும் உலகத்தின் பின் சென்று ஆண்டவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் தேவன் நம்மேல் வைத்த தம் பெரிதான அன்பினால், நம்மைத் தேடி மனிதனாக இறங்கிவந்தார். நம்மை மீட்பதற்காக, அந்த சிறுவன் கொடுத்த கிரயத்தைப் போல, தம் சொந்த இரத்தத்தையே கிரயமாக, சிலுவையில் சிந்தினார். அவருடைய அன்பு விலையேறப்பெற்றது. சிறுவன் விலைகொடுத்து வாங்கியபின் படகு இன்னும் விசேஷமானதாய் அவனுக்கு தெரிந்ததோ அதேப் போல நாம் அவர் பார்வையில் விசேஷமானவர்கள், விலையேறப்பட்டவர்கள் என்பதை ஒருநாளும் மறந்து போகாமல் அவருடைய பிள்ளைகளாய் அவர் கைக்குள் அடங்கி இருப்போம். ஆமென்! 

- Mrs.திவ்யா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு: 

ஞாயிறுதோறும் மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் ‘’கண்மணியே கேள்’’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அநேக வாலிபப் பெண் பிள்ளைகள் தொடப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet