Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-06-2022
Share:

By Village Missionary Movement

Monday, 20-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 21-06-2022

 

யாருடைய காகம்

 

“…ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்’’ - ரோமர்.8:13 

 

பேழைக்குள் இருந்த நோவா, பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிய ஒரு காகத்தை வெளியே அனுப்பினார். அது தண்ணீர் வற்றும் வரை, போகிறதும் வருவதுமாய் இருந்தது. ஏன்? அதனுடைய ஜென்ம சுபாவம் பூமியின் அசுத்தங்களை உண்பது! நீரில் மிதந்த பிணங்களை உண்ட பின், தங்குவதற்கு மாத்திரமே பேழைக்குள் வந்தது. நோவாவால் எதையுமே அறியமுடியவில்லை. காகத்தினால் எந்த பயனும் இல்லை. அது தன் சுய சித்தத்தை நிறைவேற்றியதே தவிர, நோவாவின் சித்தத்தை நிறைவேற்றவில்லை.

 

இக்காகத்தைப் போன்றவர்கள் தான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டும், ஜென்ம சுபாவத்தை ஒழித்து விடாதவர்கள் (1கொரி.2:14). அவர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களும் வேண்டும், உலகமும் வேண்டும். தேவன், அவர்களை இவ்வுலகில் வைத்த நோக்கத்தை அறியவோ நிறைவேற்றவோ தீவிரம் காட்டமாட்டார்கள்; தேவனுக்கோ மற்ற மனிதருக்கோ பயன்பட மாட்டார்கள். தேவ சித்தத்தை அல்ல, சுய சித்தத்தையே நிறைவேற்றுவார்கள்.

ஆனால், எலியாவிற்கு விடியற்காலத்திலும் சாயங்காலத்திலும் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்த காகத்தைப் பாருங்கள். தன்னையும் தன் இனத்தையும் மாத்திரமே போஷிக்கக்கூடிய அதன் ஜென்ம சுபாவத்தை தேவன் மாற்றியிருந்தார். அதன் சுயத்தை உடைத்துவிட்டிருந்தார். எனவே, அது ஊழியனை போஷித்து தேவசித்தம் செய்து, தேவனுக்கும் மனிதனுக்கும் பயன்பட்டது. அதுபோலவே, சுயத்தை முழுவதும் சிலுவையில் அறைந்துவிட்ட ஆவிக்குரிய மனிதன் ஆவியானவரால் முழுக்க முழுக்க நடத்தப்படுகின்றான். அவன் தேவனுக்கும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாய் இருப்பான்.

 

அன்பானவர்களே! நாம் நோவாவின் பேழையிலிருந்த காகமா? அல்லது எலியாவிற்கு உதவி செய்த காகமா? சிந்திப்போம். நோவாவின் காகமாக உணர்ந்தால், நம்முடைய ஜென்ம சுபாவங்களான கோபம், எரிச்சல், பெருமை, பொறாமை, போன்றவைகளை சுட்டெரிக்கும் அக்கினியான பரிசுத்த ஆவியானவரால் அனுதினமும் சுட்டெரிக்கப்பட அர்ப்பணிப்போமாக! தேவ சித்தத்தை நிறைவேற்றி, தேவனுக்கும் மனிதருக்கும் பயனுள்ள, எலியாவின் காகமாக மாறிக்கொண்டே இருப்போமாக!  

- Mrs.கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு: 

சத்தியம் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் நமது நிகழ்ச்சியின் மூலம் அநேகர் கிறிஸ்துவுக்கென்று வைராக்கியமாய் செயல்படுகிறவர்களாக எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al