Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20-06-2022
Share:

By Village Missionary Movement

Monday, 20-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 20-06-2022

 

FRIENDSHIP

 

“யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்(தான்)” – 1 சாமுவேல் 18:4 

 

இணைபிரியாத தோழிகள் இருவர் இணைந்து வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவர்களின் Ring ball வீட்டின் முன் உள்ள Slab-ல் விழ, அதை எடுக்கச் சென்றவர்களின் சிந்தனையில் ஒரு விபரீத எண்ணம் உதித்தது. தோழிகளில் ஒருத்தி “ஏய்! இதனுடைய Height குறைவாகத் தானே இருக்கிறது. இதிலிருந்து குதித்தால் நான் என் உடம்பில் ஒரு அடி கூட படாமல் எழும்பிடுவேன். உன்னால் அப்படிக் குதித்து எழும்ப முடியுமா?” என்று சொல்லி இதெல்லாம் தைரியம் உள்ளவங்க செய்யிறது, உன்னால செய்ய முடியாது என்று சொல்லவும், இவளும் அசட்டுத் துணிச்சலாக, என்னாலும் குதிக்க முடியும் என்று சவாலிட, இருவரும் ஒன்றாகக் குதிக்க முடிவு எடுத்தனர். கண்களை மூடிக் கொண்டு 1,2,3 எனச் சொல்ல டமால் என்று குதிக்க, ஐயோ என்ற அலறலின் சத்தம் கேட்டு, அனைவரும் ஓடி வந்தனர். முதுகுத் தண்டு முறிந்து, தாங்க முடியாத வேதனையில் துடித்து கொண்டிருந்தாள் தோழிகளில் ஒருத்தி. ஆனால் சாகசம் பண்ணத் தூண்டினவளோ தான் மட்டும் குதிக்காமல் மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சத்துருவின் தந்திரமான திட்டமும் இதுதான். 

 

வேதத்திலே துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் என்று சொல்லப்பட்டதன் காரணம் என்ன? ஏதேன் தோட்டத்தில் ஏவாள் சர்ப்பத்தின் வஞ்சகமான வார்த்தையைக் கேட்டு, தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், தானும் தன்னால் முழு உலகமும் பாவத்தில் விழ காரணமாகி விட்டாளே . 1இராஜாக்கள் 13-ல், ராஜாவுக்கு தேவனுடைய வார்த்தையை சுமந்து சென்ற தேவ மனுஷனோ மற்றொரு தீர்க்கதரிசியின் மூலமாக வந்த பொய்யின் வார்த்தையை நம்பி, தேவ வார்த்தையை விட்டு விலகி, சிங்கத்தின் வாயில் அகப்பட்டு மரித்தானே! இப்படியிருக்க நாம் ஒவ்வொரு நாளும் தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எவ்வளவு ஜாக்கிரதையாக வாழ வேண்டும்?

 

வாலிப கண்மணிகளே! 1சாமு. 18-20 அதிகாரங்களில், தாவீது யோனத்தானுடைய நட்பைக் குறித்து நாம் பார்க்கலாம். யோனத்தானுடைய ஆத்துமா தாவீதோடே இசைந்திருந்தது. தன் உயிரைப்போல அவனை சிநேகித்ததினால், தனக்குண்டான எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து, தன் தகப்பனாலுண்டான தீங்குக்கு விலக்கிக் காப்பாற்றி, தாவீதின் மன விருப்பத்தை நிறைவேற்றி நல்ல நண்பனாகத் திகழ்ந்தான். நல்ல நண்பர்கள் நம் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு வழி வகுப்பார்கள், துன்பமான நேரங்களில் துணையாக இருப்பார்கள். நாமும் கூட நல்ல நண்பராக இயேசுவைத் தெரிந்துகொண்டு, அவருடைய மார்பில் சாய்ந்து இசைந்த ஆத்துமாவாக ஒரு நண்பனைப் போல அவரோடு இணைக்கப்பட்டவர்களாக நாம் திகழ்வோமானால், நமக்குண்டான எல்லாக் கவலைகளையும் பிரச்சனைகளையும் அவரிடத்தில் பகிர்ந்து கொண்டு, மனபாரம் நீங்கினவர்களாக, நல் ஆலோசனை பெற்று, அவருடனான நம் நட்பைப் பலப்படுத்தி நல்வாழ்க்கை வாழ முடியும். 

- Mrs. வசந்தி ராஜ்மோகன்       

 

ஜெபக்குறிப்பு: 

நம்பிக்கை டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் கிராமிய நேரம் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet