Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-06-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 19-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 19-06-2022 (Kids Special)

 

பல்லைக் காணோம்

 

“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” - நீதி. 25:11

 

என்ன குட்டீஸ்! நீங்க கனவு கண்டிருக்கீங்களா? எல்லோருக்கும் கனவு வருவது இயற்கைதானே! சில கனவுகள் பயமாகவும், சில கவலையாகவும் இருக்கும் அப்படித்தானே. “ஒரு ராஜாவின் கனவு” எப்படி இருந்ததென்று கதை கேட்கலாமா? ராஜாவோட கனவு பற்றி கேட்க ஆசையா இருக்கா? வாங்க கதைக்குள் போவோம்.

 

ஒரு ராஜா அவர் கண்ட கனவினால் பயந்துபோய் இருந்தாராம். ராஜாவே பயப்படுகின்ற அளவுக்கு! அப்படி என்ன கனவு கண்டிருப்பார் என்று யோசிக்கிறீங்கதானே! சொல்றேன் கேளுங்க. கனவுல, அவருடைய ஒரு பல் தவிர மற்ற எல்லாப் பற்களும் விழுந்துவிட்டது. காலையில் எழுந்தவுடன் இந்தக் கனவிற்கு அர்த்தம் என்னவாக இருக்குமென்று நினைத்து, அமைச்சர்களை அழைத்தார். அர்த்தத்தை சொல்லும்படி கேட்டார். ஒருவர் எழுந்து “உங்கள் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் இறந்தபின் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்” என்றான். எல்லா அமைச்சர்களும் “ஆம் இதுதான் சரியான பதில்” என்று சொன்னார்கள். உடனே ராஜா மிகவும் பயந்து, அவையை விட்டு வெளியே சென்றார்.

 

தாமதமாக வந்த மந்திரி, “ராஜா உம்முடைய முகம் சோர்வாகவும் கலக்கமாகவும் இருக்கிறதே, என்ன காரணம்? என்று சொல்லுங்கள்” என்றார். உடனே ராஜா தான் கண்ட கனவைச் சொன்னார். இது சந்தோஷமான விஷயமே! ஏன் இதற்கு கலங்குகிறீகள்? எல்லோரையும் விட உமக்குத்தான் நீண்ட ஆயுசு நாட்கள். நீடித்து வாழ்ந்து சுகமாயிருப்பீர் என்றார். இதனைக் கேட்ட ராஜா மிகுந்த உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் தன் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். ஞானமாய் பதில் சொன்ன மந்திரிக்கு அநேக பரிசுப்பொருட்களைக் கொடுத்தார்.

 

என்ன குட்டிப்பிள்ளைகளே! இரண்டு பேருமே கனவுக்கு அர்த்தம் சொன்னது சரிதான். ஆனால் எந்தச் சூழ்நிலையில் எப்படிப் பேசவேண்டுமென்ற ஞானம் மந்திரிக்கு இருந்தது. அதை அவர் சரியாக பயன்படுத்தினார். நீங்களும் ஏற்ற சமயத்தில் ஞானமாய் பேச இயேசப்பாவிடம் ஞானத்தைக் கேட்க வேண்டும். உன் ஞானமுள்ள வார்த்தைகள் அநேகரை சந்தோஷப்படுத்தி வாழவைக்கும். என்ன குட்டீஸ்! நல்ல பொக்கிஷமான ஞானத்தைக் கேட்க ரெடி தானே!

- Mrs.அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al