Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17-06-2022
Share:

By Village Missionary Movement

Friday, 17-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 17-06-2022

 

நித்திய பரிசு 

 

“பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள்” - கொலோசெயர் 3:2

 

நோபல் பரிசு பற்றி எல்லாருக்கும் தெரியும். ஏபெல் பரிசு (Abel Prize ) பற்றி தெரியுமா? குறிப்பாக, கணிதவியல் துறையில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் பரிசுதான் ஏபெல் பரிசு. இவ்விருது இதுவரை 25 நபர்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. பரிசு பெறுபவர் 7.5 மில்லியன் Norwegian Kroner தந்து கௌரவிக்கப்படுவார். இப்படி புதிது புதிதாக எத்தனையோ விருதுகள் உண்டு.

 

தேவன் கொடுக்கும் விருதைப் பற்றியும் வேதத்திலே வாசிக்கலாம். அது ஜீவ கிரீடம், ஜீவ விருச்சத்தின் கனி இப்படி பல! எபேசு சபையின் தூதனுக்குச் சொல்லும் போது, அவர்களிடத்தில் உள்ள பல நற்குணங்களை பட்டியலிடுகின்ற தேவன், அதே நேரத்தில் அவர்களிடத்தில் உள்ள குறையையும் சுட்டிக்காட்டுகிறார், அந்தக் குறையை நிவிர்த்தி செய்யாவிட்டால், வரும் தீங்கையும் குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு, ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுப்பேன் என்று வாக்கும் அளிக்கிறார்.

 

சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுதுகையில், நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் பேசாமல், எதிர்காலத்தில் அவர்களுக்கு வரப்போகின்ற சோதனைகளைக் குறித்தும் எச்சரிக்கிறார். மேலும், மரணபரியந்தம் உண்மையாயிருக்கிறவனுக்கு, ஜீவ கிரீடத்தைத் தருவேன் என்றும் உறுதியளிக்கிறார். 

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உலகம் நமக்குத் தருகின்ற பரிசு ஏதோ ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு விஷயத்தில் நாம் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மட்டுமே இருக்கும். ஆனால், நம் தேவன் நம் குறைவுகளை முழுவதும் சீர்படுத்தி, எல்லா விதத்திலும், நம்மைத் தகுதிப்படுத்தி, பின்னர் எவராலும் அளிக்க முடியாத, ஒழிந்து போகாத நித்திய ஜீவனை நமக்குத் தர ஆயத்தமாயிருக்கிறார். அதற்கு நாம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், முழு சிந்தையோடும், அவரிடத்தில் அன்புகூர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். நம்மை முழுவதுமாக ஆண்டவரிடத்தில் அர்ப்பணிப்போம். மாசில்லாதவரிடமிருந்து பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

- Sis. ஐடா

 

ஜெபக்குறிப்பு

தினந்தோறும் அதிகாலை 5:00 மணிக்கு youtube-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் Healing Service-ல் பங்கு பெறும் நபர்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் விடுதலைபெற்று சுகம் பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al