Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15-06-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 14-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 15-06-2022

 

பரதீசின் வாழ்வு 

 

“...இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்...” – லூக்கா 23:43 

 

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவரோடு கூட சேர்ந்து இரண்டு குற்றவாளிகளும் சிலுவையில் அறையப்பட்டனர். அதில் ஒருவன் இயேசுவை நோக்கி நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக் கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றொருவன் நாம் செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கிறோம். ஆனால் இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லையே என்று சொன்னான். பின்பு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்” என்றதும், இயேசு இன்றைக்கு என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்றார். 

 

இந்தப் பரதிசீன் வாழ்வு அல்லது பரலோக வாழ்வு மரிக்கும் தருவாயில் இருந்த இந்த குற்றவாளிக்குக் கிடைத்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தன் தவறை ஒத்துக் கொண்டான். இரண்டாவது இயேசுவே நீர் செல்லும் இராஜ்ஜியத்திற்கு நான் தகுதியல்ல, ஆனால் நினைத்துக் கொள்ளும் என்றான். சிலுவையில் தொங்கினாலும் வேதனையின் மத்தியிலும் தன் தவறை ஒத்துக் கொண்டு இராஜாவாக இயேசுவை ஏற்றுக்கொண்டதால் பரதீசின் வாழ்வைப் பெற்றான்.

 

இதை வாசிக்கும் அன்பரே! நீங்களும் இந்தக் குற்றவாளியைப் போன்று பரதீசின் வாழ்வை சுதந்தரிக்க ஆசையா? இவன் தனக்குக் கிடைத்த கடைசி மணித்துளியை பயன்படுத்திக்கொண்டதைப் போல நீங்களும் இந்த சில நிமிடத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் இன்றே நிதானித்து அறிந்து தேவனிடம் உங்கள் குற்றங்களை அறிக்கையிடுங்கள். “நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1கொரி.11:31) என வேதம் கூறுகிறது. இரண்டாவது உங்களை ஆளுகை செய்யும் இராஜாவாக அவரை ஏற்றுக் கொண்டு உங்கள் இருதய சிம்மாசனத்தை அவருக்கு விட்டுக் கொடுங்கள். இயேசுவின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிய அர்ப்பணிக்கும்போது உங்களுக்கும் பரதீசு அல்லது பரலோக வாழ்வு நிச்சயம்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு:

கெத்செமனே வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet