Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  31-01-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 31-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  31-01-2021 (Kids Special)

உதவுகிறதில் ஆசீர்வாதம் 

“...உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;” – மத்தேயு 5:44

ஹாய் குட்டீஸ் எப்படி இருக்கீங்க, சந்தோஷமா இருக்கீங்களா? சரி நாம் இந்த நாளின் தியானத்தில் இரு நண்பர்களின் கதையைக் கேட்போமா? 

ரவி என்ற ஒரு குட்டிப் பையன் ஸ்கூல்ல படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பா ஒரு பெரிய பிஸினஸ்மேன். ரவிக்கு ஸ்டீபன் என்கிற ஒரு நல்ல நண்பன் இருந்தான். ஸ்டீபன் நல்ல தெய்வ பக்தியுள்ளவன். ஆனால் ரவிக்கு இதில் நம்பிக்கையே இல்லை. ஸ்டீபன் கட்டாயப்படுத்துகிறதுனால Sunday classக்கு போவான். ஆனால் அங்கு சொல்லுறத கேட்கவே மாட்டான். இந்த ரெண்டு friendsம் ஒன்றாக ஸ்கூலில் படித்து கொண்டிருந்தாங்க. அந்த க்ளாசில் இவர்களோடு கூட இன்னொரு நண்பனும் இருந்தான். அவனுடைய பெயர் யோசேப்பு. இவன் நல்ல ஜெபிக்கிறவன். யோசேப்பு ஏழையானவன் என்று ரவி அவனிடம் பேசுவதே இல்லை. எப்போதும் ஸ்டீபன் ரவியிடம் இயேசப்பாவின் அன்பைப் பற்றி சொன்னால் ரவி ஏற்றுக்கொள்ளவே மாட்டான். ஒருநாள் ரவியோட அப்பா பெலவீனமாகி ஹாஸ்பிடலுக்கு போனாங்க, அங்கு ரவியோட அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இதை கேள்விப்பட்ட யோசேப்பு ஏதாவது help பண்ண நினைத்தான். 

யோசேப்பு சூப்பரா டிராயிங் பண்ணுவான். அடுத்த நாள் அவங்க ஸ்கூலில் இன்டர்நேஷனல் drawing competition இருந்தது. அதில் யோசேப்புக்கு First prize கிடைத்தது. மற்றும் அவனுக்கு பெரிய தொகையும் gift ஆக கிடைத்தது. யோசேப்பு அந்த பணத்தை என்ன பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? அவனுடைய அம்மாவிடம் சென்று ரவியோட அப்பாவை பற்றி சொல்லி, அந்த பணத்தை ரவிக்கு கொடுக்கட்டுமா என்று கேட்டான். அதற்கு அம்மா சரி என்று சொன்னாங்க. யோசேப்பு fast ஆ ஹாஸ்பிடலுக்கு ஓடிப் போனான். அங்கே போயி அந்த பணத்தை ரவியின் கையில் வைத்து இது இண்டர்நேஷனல் drawingல் எனக்கு கிடைத்த prize. இதை நீ உங்க அப்பாவின் ஆபரேஷனுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி வீட்டுக்கு செல்ல திரும்பினான். அப்பொழுது ரவி யோசேப்பின் கையை பிடித்து அழுது கொண்டே யோசேப்பிடம் மன்னிப்பு கேட்டான்.  அதற்கு யோசேப்பு இயேசப்பாதான் எனக்கு இந்த பரிசை கொடுத்தாங்க என்று சொல்லி சென்றுவிட்டான். ரவியோட அப்பாவின் ஆபரேஷன் வெற்றிகரமாய் முடிந்தது. எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர் சொல்லிட்டாங்க. உதவி செய்ததுனால யோசேப்புக்கு வந்த ஆசீர்வாதம் என்ன தெரியுமா? யோசேப்பு வரைந்த ட்ராயிங் எல்லா leaders க்கும் புடிச்சு போச்சு. அதனால அந்த ட்ராயிங்க நோட்புக்ஸோட front page ல போடலாம்னு select பண்ணுனாங்க. இயேசப்பா யோசேப்பை ஆசீர்வதித்து அவனை உயர்த்தி வைத்தார். 

என்ன குட்டீஸ்! கதை நல்லா இருந்துச்சா, நீங்களும் யோசேப்பை போல யார் உங்களை வெறுத்தாலும் நீங்க அவங்களுக்காக ஜெபித்து அவங்க குறைவு படும்போது அவர்களுக்கு உதவி செய்தால் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார். இனிமே உதவி பண்ணுவீங்களா. 
-    Baby. A. திவ்யா பீபா  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking