Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-06-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 09-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 10-06-2022

 

குறை கூறுதல்

 

‘’…கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்’’ - நீதிமொழிகள் 16:28

 

நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு ஒரு நபர் அறிமுகமானார். அவர் முதலாவது சிலரைப் பற்றிய சில குறைகளை என்னிடம் கூறினார். அதற்கான காரணம் என்னுடைய நன்மைக்காகத் தான் எனவும் கூறினார். நாட்கள் செல்லச் செல்ல பலரைக் குறித்தும் இவ்வாறாக கூற ஆரம்பித்தார். அந்த கசப்பான விதை எனக்குள் முளைக்கத் துவங்கியது. அவர் யாரைப்பற்றியெல்லாம் குறை கூறினாரோ அவர்களை நான் நேரில் சந்தித்தபோது, எனக்குள் இருந்த அந்தக் கசப்பு என்னை அவர்களுடன் நெருங்கவிடாமல் செய்தது. ஆனால் அந்த நபரோ எந்த ஒரு தயக்கமுமின்றி அவர்களுடன் சகஜமாகப் பழகி வந்தார். ஒருநாள் ஞாயிறு ஆராதனையின் போது, என்னிடம் குறைசொல்லப்பட்ட நபர், பாடல் பாடி ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார். அதன் மூலம் தேவன் என்னோடு கூட மிகவும் தெளிவாய் பேசினார் ’’நீ ஏன் மனிதனைப் பார்க்கிறாய், ஒரு மனிதன் சொன்னதை வைத்து, நீ ஏன் மனக்கசப்புடன் வாழ்கிறாய்?’’ என்று உணர்த்தினார். உடனே நான் மறுநாள் முதல் வேலையாக அந்த நபரிடம் சென்று, உங்கள் ஆராதனை அருமையாக இருந்தது நான் தொடப்பட்டேன் எனக் கூறி நல்மனம் பொருந்தினேன். என்னிடம் குறை கூறும் நபரிடம் சென்று, இனி இதுபோல் என்னிடம் பேச வேண்டாம் என கனிவுடன் கூறவும் தேவன் கிருபை செய்தார். அன்று முதல் மற்றவர்களைப் பற்றி பேசும் இடத்தில் நான் நிற்பதில்லை. என் மனக்கசப்புகள் மாறிவிட்டன.

 

மேலும் யாராவது அங்கே இல்லாத மூன்றாம் நபரைக் குறித்து உங்களிடம் குறை கூறத் தொடங்குவார்களானால், லாவகமாக பேச்சை மாற்றி அந்த மூன்றாம் நபரிடமுள்ள Positive- ஆன காரியங்களைப் பேசி அப்படியே பேச்சை முடித்துவிட வேண்டும். புறங்கூற வந்தவரும் அமைதியாகி விடுவார். லேவியராகமம் 19:16 இவ்வாறாகக் கூறுகிறது, ‘’உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக, பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்...‘’ ஆம் பிரியமானவர்களே, அநேக நேரங்களில் நாம் நம்மை அறியாமல் பிறரைக் குறித்த காரியங்களைப் பேசுவதுண்டு. ஆனால் வேதம் தெளிவாக இதற்கு எதிர்த்து நிற்கிறது. 

 

Spanish மொழியிலே ஒரு அருமையான பழமொழி உண்டு. ‘’Who ever gossips to you, will gossip about you’’ (உன்னிடம் பிறரைப் பற்றி குறைகூறுபவர்கள், ஒருநாள் உன்னைப் பற்றியும் பிறரிடம் புறங்கூறுவார்கள்) எனவே குறை கூறுவதையும் பிறரது குறைகளைக் கேட்பதையும் தவிர்ப்போம். கசப்பான இருதயமில்லாமல் வெள்ளை உள்ளத்தோடு தேவ அன்பால் நிரப்பப்பட்டவர்களாக வாழ்வோம்.

- T. ராஜன்

 

ஜெபக்குறிப்புகள்:

ஒரு கிராமத்திற்கு ரூ 2000 வீதம் கொடுத்துத் தாங்கும் கிராமப் பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al