By Village Missionary Movement
Thursday, 09-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 09-06-2022
பிரேக்
“...முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்;…” - யோபு 42:12
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம், “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன?” என கேட்டார். பலவகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. நிறுத்துவதற்கு, வேகத்தைக் குறைப்பதற்கு, மோதலை தவிர்ப்பதற்கு, மெதுவாக செல்வதற்கு, சராசரி வேகத்தில் செல்வதற்கு என பல்வேறு பதில்கள் மாணவர்களிடமிருந்து வந்தது. ஒரு மாணவன், “வேகமாக ஓட்டுவதற்கு” என்றான். உடனே மற்ற மாணவர்கள் சிரித்தனர். ஆசிரியர் சொன்னார், “ஆம், பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்ட முடியாது. பிரேக் மட்டுமே நாம் விரும்பும் இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்ற தைரியத்தைக் கொடுத்து வேகமாக ஓட்டச் செய்கிறது” என்றார். நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.
Sudden Break போட்டு நின்ற ஒரு மனிதருடைய வாழ்க்கையைக் குறித்து வேதத்திலே வாசிக்கிறோம். அவர்தான் யோபு. அவருக்கு 10 பிள்ளைகள் இருந்தனர். ஏராளமான மிருக ஜீவன்கள், திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள். இவ்வளவு செழிப்பும் வளமுமாக இருந்த மனிதருக்கு எல்லா ஆசீர்வாதங்களும் ஒரே நாளில் பிரேக்கானது. எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்தார். இவைகள் எல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவில்லை , தேவனைப் பற்றி குறை சொல்லவுமில்லை. தன் வாழ்வை நடத்துகிற தேவன் போட்ட பிரேக் தவறாகாது என்று நம்பினார். பிற்பாடு, யோபு இழந்த எல்லா ஆசீர்வாதங்களையும் இரட்டிப்பாய் பெற்றுக்கொண்டார். கர்த்தர் யோபுவின் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.
இதை வாசிக்கின்றதான தேவப்பிள்ளைகளே! நம்முடைய வாழ்க்கையில் இழப்புகள், தடைகள், பிரேக்குகள் (உடைவுகள்) வரும்போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தைக் குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக்கொள்கிறோம். உங்கள் வாழ்க்கையில் வரும் பிரேக்குகள் உங்கள் வேகத்தைக் குறைப்பதற்கு அல்ல, வேகமாகச் செல்வதற்குத்தான்! நம் வாழ்வில் திடீரென்று போடப்படுவதுபோல தோன்றும் பிரேக் ஆண்டவரின் காலின் கீழோ அல்லது அவரது கைக்குள்ளேதான் இருக்கிறது. ஆண்டவரின் கையை மிஞ்சி நம் வாழ்வில் எதுவும் நடக்காது. ஆகவே நிதானமாக இருந்து யோபுவைப் போல இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வோம்.
- Mrs.சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிதியோன் (வாலிபன்) ஜெபக்குழுத் தலைவனாக எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250