Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01-06-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 01-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 01-06-2022

 

ஆவியின் பட்டயம் 

 

“பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.” - எபிரெயர் 5:13 

 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் சில போர்களை சந்திக்க வேண்டியதிருந்தது. அனைத்து யுத்தங்களிலும் பாகிஸ்தானை நம் இந்திய தேசம் ஜெயித்தது. பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்களது இராணுவத்தின் பலவீனம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தார்கள். தங்களிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந்தும் அவைகளை முறையாக இயக்க தெரியாத, அதாவது குறைவான பயிற்சி பெற்றவர்கள் இருந்தபடியினால் யுத்தத்தில் எளிதாய் தோற்றுப் போனோம் என கண்டனர். அதிநவீன பயங்கரமான ஆயுதங்கள் இருந்தும் அதைப் பற்றிய தெளிவு இல்லாதபடியால் யுத்தத்தில் புறமுதுகு காட்ட வேண்டியதாயிருந்தது. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி உள்ளது.

 

ஆவிக்குரிய உலகில் நமக்கு விரோதமாய் ஒரு யுத்தம் உள்ளது. அதிலே பிசாசை எதிர்த்து நாம் போர் செய்ய வேண்டியது அவசியம். சத்துருவிடம் பலவீனமான ஆயுதங்கள் தான் இருக்கின்றது. ஆனால் அதைக் கொண்டே தந்திரமாக அநேகரை தாக்குகிறான். அதே வேலையில் தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மிடம் பலமுள்ள ஆயுதங்கள் இருக்கின்றது. பவுல் எபேசியர் 6 ம் அதிகாரத்தில் நமக்கு என்னென்ன ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை பட்டியலிடுகிறார். இப்படி சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொண்டு கிறிஸ்துவுக்குள் புருஷர்களாய் காணப்பட வேண்டிய நாம் இன்னும் குழந்தைகளாக தவழ்ந்து கொண்டிருப்பது வேதனையான செய்தியாகும். அதிலும் குறிப்பாக வேத வசனம் என்னும் ஆவியின் பட்டயத்தை உபயோகிக்க பழக்கம் இல்லாதவர்கள் எளிதில் சாத்தானுக்கு இரையாகி விடுகின்றனர்.

 

இயேசு கிறிஸ்துவை சோதிக்கும்படி பிசாசு கொண்டுவந்த மூன்று சோதனைகளையும் வேத வசனத்தை கொண்டு இயேசு ஜெயித்தார். வேதத்தில் இப்படி எழுதி இருக்கிறதே என்பதை திரும்பத் திரும்ப இயேசுவானவர் சுட்டிக் காண்பித்தார். இதை வாசிக்கும் என் அருமை கிறிஸ்தவ நண்பரே! உங்களுக்குள் வேத வசனம் நிரம்பி இருக்கும்படி தேவன் விரும்புகிறார். உங்களை எதிர் கொண்டுவரும் எல்லா பிரச்சனைகளையும் சத்துருவின் தந்திரங்களையும், மாய்மாலங்களையும் முறியடிக்க வேத வசனத்தை தவிர பிரதானமான வேறு ஆயுதம் எதுவுமில்லை. ஆகவே பரிசுத்த வேதாகமத்தை கையில் எடுத்து மணிக்கணக்காக வாசியுங்கள், தியானியுங்கள், வசனத்தால் நிரப்பப்படுங்கள் அப்பொழுது நீங்கள் ஜெயிக்கிறவர்களாக காணப்படுவீர்கள். ஆமென்!

- P.ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு: 

இம்மாதம் முழுவதிலும் நடைபெறுகிற ஊழியங்களில், தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ண ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking