Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29-05-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 29-May-2022

இன்றைய தியானம்(Tamil) 29-05-2022 (Kids Special)

 

மலிவு விலை

 

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” – நீதிமொழிகள் 19.17

 

Hai Friends எப்படி இருக்கீங்க Super-ஆ இருக்கீங்களா? Very good இன்றைக்குரிய கதையை கேட்க ரெடியா இருக்கீங்களா, நானும் உங்களுக்கு கதை சொல்ல ரெடியா வந்திருக்கேன், கேட்கலாமா? 

 

Sweety home work எல்லாம் எழுதி முடித்துவிட்டு, அப்பா எப்போதான் வருவாங்கன்னு பார்த்துக் கொண்டே இருந்தாள். ஏன்னா அப்பா கிட்ட Apple பழம் வாங்கி வரச் சொன்னாள். அவளுக்கு Appleன்னா ரெம்ப பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்குமா? Sweety யோட அப்பா வேலை முடிந்து வரும்போது, Apple வாங்க மறந்துட்டாங்க. பழக்கடைகளையெல்லாம் தாண்டி வந்த பிறகு தான் அப்பாவுக்கு மகள் Apple கேட்டது ஞாபகம் வந்தது. அடடா... இப்படி மறந்து விட்டேனே என்று யோசித்தபடியே எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்த்தார். ரோட்டோரத்தில் ஒரு பாட்டியம்மா ஆப்பிள் விற்றுக் கொண்டிருந்தார். அந்த நாள் வருமானமே இல்லாததால் கவலையோடு இருந்தாங்க பாட்டி. அவர், “ஆப்பிள் எவ்வளவு?” என்று கேட்டார். பாட்டி, “200 ரூபாய்” என்றார்கள். “குறைத்துக் கொடுங்கள்” என்று கேட்டதும், “சரிப்பா 180 கொடு” என்று 1 கிலோ ஆப்பிள் நிறுத்து கொடுத்தாங்க. இவர் அதிலும் 20 ருபாய் குறைத்து, “இந்தாங்க பாட்டி 160 ரூபாய்தான் இருக்கு” என்று கொடுத்தார். காசை குறைத்துக் கொடுத்ததை எண்ணி Sweety-யோட அப்பா சந்தோஷத்தோடு போனாங்க.       

 

அடுத்த வாரம் அப்பா ஒரு பெரிய பழக்கடையில் ஆப்பிள் வாங்க விலையை விசாரித்தார். 250 என்றார்கள். அங்கு பேரம் பேசவும் முடியாது குறைக்கவும் முடியாதில்லையா? உடனே பாட்டியிடமே வாங்கிக் கொள்வோம் என்று வந்தார். அன்று பாட்டி பக்கத்தில் கண் தெரியாத பேத்தி உட்கார்ந்திருந்தாள். ஆப்பிள் விற்ற வருமானத்தில்தான் இரண்டு பேரும் வாழ்கிறோம் என்று பாட்டி சொன்னதும் Sweety-யின் அப்பாவுக்கு அன்று ஆப்பிளை மிகவும் விலையை குறைத்து வாங்கியது மனதுக்கு வருத்தமாக இருந்தது. நமக்கு அந்த 40 ரூபாய் பெரிய காரியமல்ல, ஆனால் பாட்டிக்கோ அதுதான் வாழ்வாதாரம். இனி இப்படி சிறு சிறு தொழில் செய்பவர்களிடம் 5,10 ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசக்கூடாது என தீர்மானித்தார். இனி பாட்டியிடமே Apple வாங்குவேன் என்று முடிவு பண்ணினார். தன்னோட Friends, உறவினர்களுக்கும் பாட்டியம்மாவை அறிமுகப்படுத்தினார். பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம்.

 

என்ன குட்டீஸ், யாரையும் ஏமாற்றக் கூடாது. ஏழ்மை நிலையில், வறுமையில் இருகிறவர்களைப் பார்த்தா அவங்க மேல இரக்கப்பட்டு, உதவி செய்யணும். அவங்களுக்கு செய்கின்ற உதவி ஆண்டவருக்கு செய்ததாக வேதம் சொல்கின்றது செய்வீங்க தானே! 

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al