By Village Missionary Movement
Friday, 27-May-2022இன்றைய தியானம்(Tamil) 27-05-2022
யாருடைய வார்த்தை
‘’கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்’’ – சங்கீதம் 1:2
ஒரு முறை நான் என் மாமா வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் மாமா கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டே ஊழியத்தையும் செய்து வருகிறார்கள். அப்போது ஒருநாள் ஒரு பெண் என் மாமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என் திருச்சபையின் பாஸ்டரம்மா என் மனம் நோகும்படி பேசிவிட்டார்கள், அவர்கள் கூறிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியவில்லை, அது என் வேலைகளைச் செய்யவிடாமல் என்னை திசை திருப்புகிறது, என்னால் அவற்றை சகிக்க முடியவில்லை’’ எனக் கூறிக்கொண்டிருந்தார்கள். என் மாமா அவர்கள் பேசுகையில் இடைமறித்து, இரண்டு கேள்விகளைக் கேட்டார்கள். நீங்கள் சிந்திப்பது ‘’இயேசு கிறிஸ்துவின் வார்த்தையா? அல்லது யேசபேலின் வார்த்தையா?’’ என்று.
சிறிது நேரம் சென்ற பிறகு நான் என் மாமாவிடம் சென்று, “அது என்ன இயேசுகிறிஸ்துவின் வார்த்தையா? யேசபேலின் வார்த்தையா?’’ எனக் கேட்டேன். அதற்கு அவர், “எலியாவைக் குறித்து நாம் யாவரும் அறிவோம். மிகவும் தைரியமான ஒரு தீர்க்கதரிசி, பல வல்லமையான காரியங்களைச் செய்தவர். ஆனால் அவ்வளவு பெரிய தைரியசாலி, ஒருமுறை யேசபேல் அனுப்பிய மிரட்டலைக் கேட்டுப் பயந்துபோய், தன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்படி புலம்புவதைப் பார்க்கிறோம். அதற்கு முன் கர்த்தர் அவர் மூலம் செய்த அற்புதங்கள் மிகவும் பிரமிக்கத்தக்கது. சாறிபாத் விதவையின் வீட்டில் செய்யப்பட்ட அற்புதம்(1இரா.17:14), பின்பு அவர் ஜெபித்தபோது வானத்திலிருந்து அக்கினி இறங்கி பலிகளைப் பட்சித்த அற்புதம் (1இரா.18:38) அதன் பின்பு அவர் ஜெபித்தபோது வருடம் முழுவதும் பெய்யாத மழை பெய்தது. (1இரா.18:41-44) என்று பட்டியலிடலாம். இப்படி ‘’இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான்’’ என்று தைரியமாய் முழக்கமிடும் எலியா, 1இரா.19:4ல் தைரியமற்று என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்று முறையிடுகிறார்.
ஆம் பிரியமானவர்களே! அநேக நேரங்களில் நாமும் கூட தேவனுடைய வார்த்தையை அப்பியாசிக்காதபடி நாம் நம் இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டு யேசபேல் போன்ற உலக மனிதர்களின் வார்த்தைகளால் நம்முடைய இருதயத்தை நிரப்பி நொந்து போகிறோம். ஆனால் நாம் ஆண்டவரை நோக்கிப் பார்த்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதின்படி நடக்கும் போது எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் தேவன் அதில் ஒரு தைரியத்தையும், பெலனையும், வெற்றியையும் தர வல்லவராயிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். இன்று நாம் யாருடைய வார்த்தைகளை தியானிக்கின்றோம்?
“இயேசுகிறிஸ்துவின் வார்த்தையா? யேசபேலின் வார்த்தையா?
- Mrs. ஸ்டெபி ராக்ஸன்
ஜெபக்குறிப்பு
வீட்டு சபை உருவாக்கும் திட்டத்தின் கீழ் அநேக வீட்டு சபைகள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250