Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-05-2022
Share:

By Village Missionary Movement

Monday, 23-May-2022

இன்றைய தியானம்(Tamil) 23-05-2022

 

லைஃப் ஸ்டைல்

 

“உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்...” – 1 யோவான் 2:15

 

ஒரு தனி நபரின் நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்கள், நாகரீகம் போன்றவற்றையே Life Style என்று அழைக்கிறோம். தகவல் தொடர்பு, தொழில் நுட்ப முன்னேற்றம், கணினி மயமாக்கம் போன்றவை உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கி விட்டன. மற்றவர்கள் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என எதிர்பார்க்கும் வாலிப வயதின் ஆசைகள் அவர்கள் வாழ்வையே திருப்பிப் போட்டு விடுகின்றன. வாலிபர்கள் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சில காரியங்களைக் காண்போமா?

 

தகவல் தொடர்பு: செல்போனும் email-ID-யும் இல்லாவிட்டால் மரியாதையே கிடையாது என அநேக வாலிபர்கள் எண்ணுகிறார்கள். அவசியத்திற்காகவும் அவசரத்திற்காகவும் போனை பயன்படுத்துவோர் வெகு சிலரே. ஆனால் பெரும்பாலானோரால் அரட்டையடிப்பதற்கும் விளையாடுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது. “சொற்களின் மிகுதியினால் பாவமில்லாமல் போகாது”. பந்தாவிற்காக வாங்கின காஸ்ட்லி செல்போன் உங்கள் பரிசுத்தத்தை கெடுத்து விடாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.

 

பொழுது போக்கு: டிவி, இன்டர்நெட், நவீன இசை, இரவு விருந்துகள் இவை யாவும் பொழுது போக்கு என்ற பெயரில் பொழுதை கெடுத்து விடுகின்றன. இண்டர்நெட்டும், வலைதளமும் கல்விக்கும் பொது அறிவிற்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பல நேரங்களில் ஆபாச வலை விரிக்கும் தளமாக மாறிவிடுகிறது. வாலிபப் பெண்களே ஜாக்கிரதை.

 

நாகரீகம்: உடை ஒரு நபரின் மனப்பான்மையை வெளிப்படுத்தும் கருவி என்றார் ஒருவர். நம்மை புதிதாய் பார்ப்போர் நம் உடையை வைத்தே மதிப்பிடுவர். பெண்களின் ஆடை ஆண்களுக்கு இடறலாக அமையக்கூடாது. ஆம் எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரம் இருந்தாலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாம் பக்தி விருத்தியை உண்டாக்காது (1கொரி.10:23) 

 

வாலிபரே! உங்கள் லைஃப் ஸ்டைல் காலத்திற்கு ஏற்ப மாறும் போது கீழ்க்கண்ட மூன்று கேள்விகளைக் கேளுங்கள். 1. இது கர்த்தரைப் பிரியப்படுத்துமா? 2. இது எனக்கோ பிறருக்கோ இடறலுண்டாக்குமா? 3. இது நேரத்தையோ பணத்தையோ வீணாக்குமா? 

 

காலங்கள் மாறலாம், வாழ்க்கை முறை மாறலாம், ஆனால் நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் மாறாதவர். அன்று மக்களிடம் எவ்வளவு பரிசுத்தத்தை விரும்பினாரோ, இன்றும் அதே அளவு பரிசுத்தத்தையே நம்மிடமும் எதிர்பார்க்கிறார். ஆகவே, நாகரீக மாற்றத்தால் கறைபடாத பரிசுத்த வாழ்வு வாழ்ந்து தேவனை மகிமைப்படுத்துங்கள்.

- P.கென்னடி

 

ஜெபக்குறிப்பு:

சமூக வலைதளங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் வெளிவரும் தினதியான செய்தியின் மூலம் எல்லா மக்களும் கிறிஸ்துவுக்குள் வளர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al