Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22-05-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 22-May-2022

இன்றைய தியானம்(Tamil) 22-05-2022

 

புதிதான வாழ்க்கை 

 

“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின” – 2 கொரி. 5:17   

 

ஸ்காட்லாந்து தேசத்தில் பழமையான ஆலயம் ஒன்று இருந்தது. பார்ப்பதற்கு அழகா Super -ஆகவும் இருந்தது. ஆனால் ஒரு சிலர்தான் இந்த ஆலயத்திற்கு வருவாங்க. பெஞ்ச் மற்றும் தரையில் இருக்கும் தூசியை துடைத்து சுத்தம் செய்து prayer நடத்தி விட்டு செல்வார்கள். ஆனால் உயரத்தில் மாட்டி இருந்த படத்தை எடுத்து யாருமே சுத்தம் செய்ததில்லை. அது என்ன படம் என்று கூட தெரியாத அளவிற்கு தூசியால் மூடி இருந்ததால் அந்தப் படத்தை எடுத்து சுத்தம் பண்ணுவது கடினமான வேலை என்று நினைத்து யாருமே அதைச் செய்யவில்லை. அந்த நேரத்தில் ஒரு Team ஆலயங்களுக்கு சென்று ஒரு வாரம் தங்கியிருந்து ஆலயம் முழுவதையும் சுத்தம் செய்யத் தீர்மானித்தனர். மேலே இருந்த படத்தைப் பார்த்து இந்தப் படத்தை எல்லாம் எடுத்து கீழே போட்டு விடலாம் என்று சொன்னபோது இன்னொருவர் அது என்ன படம் என்று பார்ப்போம் என்று சொல்லி தூசியைத் தட்டி தண்ணீரால் சுத்தம் செய்து, துணியை வைத்து துடைத்து விட்டுப் பார்த்தால் அழகான படமாக காட்சியளித்தது. என்ன படம் என்று பார்க்கும் போது இயேசப்பா கடைசியாக சீஷர்களுக்கு அப்பம் மற்றும் திராட்சரசம் கொடுத்த படம். இந்தப் படத்தை யார் வரைந்தது என்று பார்த்த போது உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த படம் என்று அறிந்து எல்லாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். இது எவ்வளவு விலை உயர்ந்தது. இது 50 கோடிக்குக் கூடப் போகும். இது ரொம்ப முக்கியமானது என்று அதை ஆலயத்தில் மாட்டி வைத்தார்களாம். 

 

அன்பான தம்பி, தங்கச்சி நமக்குள்ளேயும் விலையுர்ந்த அழியாத ஆத்துமா இருக்கிறது. பொய் சொல்வது, திருடுவது, கெட்டவார்த்தை பேசுவது, கீழ்ப்படியாதது... இப்படிப்பட்ட பாவ தூசிகள் படிந்து அழகான ஆத்துமாவை மறைத்து வைத்து விடுகிறது. இதற்காகத் தான் இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்து, இரத்தம் சிந்தி மரித்தார். அவருடைய இரத்தம்தான் பாவ அழுக்கை கழுவி ஆத்துமாவை சுத்தமாக்கி, நம்மை புது சிருஷ்டியாய் மாற்றுகிறது. அதுமட்டுமல்ல... இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும்போது விலையேறப் பெற்றவர்களாய் நாம் மாறிவிடுகிறோம். என்ன குட்டீஸ்! இயேசப்பாவுக்குள் புது சிருஷ்டியாய் மாறி விட ஆசைதானே! Very Good!

- Sis. தெபோராள்.

 

ஜெபக்குறிப்பு: 

மோட்சப்பயணம் தினதியான இதழை வாசிப்போர் சத்தியத்தில் வளர்ந்து சாட்சியாய் ஜீவிக்க ஜெபியுங்கள்.

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş