By Village Missionary Movement
Wednesday, 18-May-2022இன்றைய தியானம்(Tamil) 18-05-2022
மிருக குணம்
“...யுத்தம் கர்த்தருடையது ...” -1சாமுவேல் 17:47
செய்தித்தாளிலே மிருகத்தனமாக, நடந்தவர்களைக் குறித்து நாம் படித்திருப்போம். இதுபோல் பல சம்பவங்கள் நடந்த நம் தேசத்திலே, அநேக வாலிபப் பெண் பிள்ளைகள், சிறு பிள்ளைகள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டதை நினைக்கும் பொழுது நம் நெஞ்சம் பதறுகிறதல்லவா! மனிதர்களுக்குள் இப்படியொரு மிருககுணமா என்று நமது உள்ளத்தில் இருந்து கோபம் கொப்பளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சமுதாய சீர்குலைவிற்கு காரணமான அவர்கள் தண்டிக்கப்பட்டாலும் இறந்து போன பெண் பிள்ளைகளின் குடும்பம் எப்படி சகிக்குமோ! ஒருவேளை அவர்கள் இந்தச் சமுகத்தில் நடைபிணங்களாக இருப்பார்களோ! தாங்கொண்ணா துயரம்!
வேதத்திலே தாவீது சவுலின் உரையாடலே 1சாமுவேல் 17-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். பெலிஸ்தியனாகிய கோலியாத்தை உன்னால் எதிர்கொள்ள முடியாது ஏனென்றால் நீ இளைஞன் இவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்று இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தாவீதுக்கு ஆலோசனை சொல்லி, தாவீதை யுத்தம் செய்யவிடாமல் தடுப்பதை நாம் காணலாம் (1சாமுவேல்17: 32) அதற்கு தாவீது சவுலைப் பார்த்து சொன்ன காரியம் தான் மிகவும் பயங்கரமானது. அதென்னவென்றால் தாவீது தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒருவிசை ஒரு சிங்கமும் ஒருவிசை கரடியும் வந்து மந்தையில் இருந்த ஒரு ஆட்டைப் பிடித்தபோது அவன் அதைத் தொடர்ந்து போய் அதை அடித்து அதின் வாய்க்கு தப்புவித்ததேயாகும்.
எனக்கன்பானவர்களே! செயல்படுவதில் தாவீதைப் போல தீவிரம் காட்டுவோமா? கொடிய மிருகங்களிடமிருந்து தேவ பெலத்தால் தாவீது தன் ஆட்டை காப்பாற்றியது போல நாமும் கொடிய மனிதர்களிடமிருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டுமல்லவா? அதற்காக நாம் வன்முறையில் இறங்கத் தேவையில்லை. நாம் ஜெபித்தால் நம் தேசத்தில் நடக்கும் அவலநிலை மாறும். ஆத்துமாக்கள் கிறிஸ்துவண்டை வழிநடத்தப்படுவார்கள். நாம் நம்மை குறைவாக மதிப்பிட்டு எதிராளியான பிசாசானவனைக் கண்டு பயப்படுகிறவர்களாய் இருக்கிறோமா? யுத்தம் கர்த்தருடையது என்று தாவீது சொன்னது போல, நாமும் யுத்தகளத்தில் இருந்தால் போதும், நமக்குள் கர்த்தர் இருந்து செயல்படுவார். தேசத்தின் ஷேமத்திற்காக முழங்கால் யுத்தம் செய்வோம், ஜெயமெடுப்போம்!
- Bro.அனீஸ் ராஜா
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்களில் பணிபுரியும் ஊழியர்களை தேவன் விசேஷித்த ஆவியினால் நிரப்பி பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250