By Village Missionary Movement
Tuesday, 17-May-2022இன்றைய தியானம்(Tamil) 17-05-2022
எளிமை
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” - 1. தீமோ. 6:6
ஒரு அழகான மாலை வேளை. ஓய்வு பெற்ற ஆசிரியரைக் காண மூத்த மாணவர்கள் வந்திருந்தனர். அவரும் வரவேற்று உங்கள் வேலை, வாழ்க்கை எல்லாம் எப்படியாகச் செல்கிறது என கேட்டுக் கொண்டிருந்தார். அருகில் இருந்த தன் மனைவியிடம் தேநீர் கொண்டு வரும்படி கூறினார். ஒரு ரகசியத்தையும் சொல்லி அனுப்பினார். உரையாடல் தொடர்ந்து கொண்டே சென்றது. மாணவர்கள் தாங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்றும் விரக்தியாய் தங்கள் வாழ்க்கை செல்கிறது என தங்கள் திருப்தியின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தேநீர் வந்தது. ஆனால் விதவிதமான கோப்பைகளில் வந்தது. மாணவர்கள் ஒருவரை காட்டிலும் ஒருவர் சிறந்ததாக, அழகிய கோப்பைகளை தெரிந்தெடுத்தனர். சாதாரண கோப்பைகளில் உள்ள தேநீர் மாத்திரம் எஞ்சி இருந்தது. ஆசிரியர் தொடர்ந்தார், மாணவர்களே உங்கள் தேர்ந்தெடுப்பு ஒருவரைக்காட்டிலும் மற்றொருவர் பெஸ்ட் ஆக தேர்ந்தெடுத்தீர்கள். ஒன்று தெரியுமா? அனைத்து கோப்பைகளிலும் உள்ள தேநீர் ஒரே விதமாக தயாரிக்கப்பட்டவைகள்தான். இப்படித்தான் அதிகப்படியான எதிர்பார்ப்பும் ஆசைகளும் உங்கள் வாழ்க்கையை திருப்தியற்றதாக மாற்றி புலம்ப வைத்து விட்டது. போதும் என்ற மனதுடன் எளிமையான வாழ்க்கை வாழப் பழகுங்கள் வாழ்க்கை இலகுவாக இருக்கும்” என்றார்.
நம் வேதத்திலும் கூட எஸ்தர் புத்தகத்தில் படித்திருப்போம் அல்லவா? மொர்தெகாய் தன் சிறிய தகப்பனுடைய குமாரத்தியாகிய எஸ்தரை வளர்த்து ராஜ அரமனையிலே 127 நாடுகளுக்கு ராஜாத்தியாக மாற்றிய பின்பும்தான் இன்னார் என்று அறிவியாமல் தான் முன்பு செய்து வந்த வாயிலில் காவல் பண்ணுகிறதையே தொடர்ந்தான். அவருடைய எளிமைக்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. மொர்தெகாயின் எளிமை, அவருடைய தேவ பக்தி, ராஜாவின் உயிரைக் காப்பற்றியபோதும் தன்னை முன்னிலைப்படுத்தாத தன்மை, தம் ஜனத்திற்காக பரிதபிக்கும் உள்ளம்… என அவரது தாழ்மையான குணம் போன்ற நற்குணங்கள் அவரை அந்த சூசான் அரமனையில் மேன்மையாக வைத்தது.
ஆம் எனக்கன்பான தேவ பிள்ளைகளே! திருப்தியற்ற வாழ்க்கையோ? கசப்பாய் தோன்றுகிறதோ? மனம் சலித்துப் போனீர்களோ? தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கே என மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என வேதமும் கூறுகின்றது. அவர்... எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனை பிரபுக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவர் நம் கர்த்தரல்லவா! மொர்தெகாயின் எளிமையான குணம் நம்மிடம் உண்டா? சாதாரண வாயில் காவலனான மொர்தெகாயை உயர்த்தினவர் உங்களையும் நிச்சயமாய் மேன்மையான இடத்தில் வைப்பார். அல்லேலுயா!
- Sis .மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
நமது கெத்செமனே வளாகத்தில் நடைபெறுகின்ற மருத்துவப்பணியின் மூலம் சந்திக்கப்படுகின்ற கிராம ஜனங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் சுகம் பெற்று இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250