Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-05-2022
Share:

By Village Missionary Movement

Friday, 13-May-2022

இன்றைய தியானம்(Tamil) 14-05-2022

 

இரக்கம் 

 

“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” - மத்தேயு 5:7

 

மேற்கு மிக்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். கீமொதெரபி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை. ஏனெனில் அவன் தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டிவிட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில் கிட்டத்தட்ட வழுக்கைத் தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்குத் திரும்பிய முதல் நாளில் வியப்பு அவனுக்குக் காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்பு கொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது இரக்கத்தைக் காட்டினர். நண்பர்களுடைய இச்செயல் அச்சிறுவனுடைய வேதனையை குறைத்தது.

 

வேதத்தில் பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள் அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள். அவள் நாணலுக்குளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டு வரும்படி செய்தாள். அவள் அதின் மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள் (யாத்திராகமம்2:5,6) பார்வோனின் குமாரத்தி அந்த குழந்தையின் மேல் இரக்கம் காட்டினாள். அந்த குழந்தை அன்றையதினம் காப்பாற்றப்பட்டது. ஆண்டவராகிய இயேசுவும் தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் இரக்கத்தைக் குறித்துப் பேசுகிறார். நம்முடைய ஆண்டவர் இரக்கமுள்ளவர். அவர் ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் செய்கின்றவர்.                     

 

பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் ஏற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரக்கம் இல்லாமல் இருக்கவே கூடாது. பாவத்திலும் சாபத்திலும் வாழ்ந்துகொண்டிருந்த நம்மீது இயேசுவானவர் இரக்கம் காண்பித்து, இரக்கமாய் இரட்சித்தார். நாம் இருக்கிற இடத்திலும், தெருக்களிலும் உள்ள நபர்கள் மீது இரக்கமுள்ளவர்களாயிருக்கிறோமா? அவர்கள் நம்முடைய இரக்கத்தின் நிமித்தமாக இரக்கத்தின் பிதாவைக் கண்டுகொள்ளமுடியுமா?

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நம்பிக்கை டிவி மற்றும் சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நமது நிகழ்ச்சியின் மூலம் அநேகர் கிறிஸ்துவுக்கென்று வைராக்கியமாய் செயல்படுகிறவர்களாய் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet