Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-05-2022
Share:

By Village Missionary Movement

Friday, 13-May-2022

இன்றைய தியானம்(Tamil) 13-05-2022

 

ஒரே ஒரு முறை 

 

“...நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்;...” - யோவான் 9:4

 

ஒரு அறிவிப்புப் பலகையிலே எழுதப்பட்ட வாசகத்தை வாசித்த போது, அந்த வாசகம் என்னை அதிகமாய் சிந்திக்கத் தூண்டியது, “நீ இந்த உலகத்தின் வழியாக ஒரே ஒருமுறை கடந்து செல்கிறாய். அதை மற்றவர்களுக்கு எவ்வளவு பயனாக்க முடியுமோ அவ்வளவு பயனாக்கிவிடு” இதுவே அந்த வாசகம். 

 

ஆம், வாழ்க்கை என்பது நம் கையில் தரப்பட்ட விலையேறப் பெற்ற பொக்கிஷம். ஒரே ஒருமுறை இந்த உலகத்தின் வழியாக நாம் கடந்து செல்கிறோம். ஏனோ தானோ என்று வாழ்க்கையை வீணடித்து விடக் கூடாது. ஒவ்வொரு வினாடியும் ஆண்டவருக்கு எவ்வளவு செலவழிக்கிறோம்? ஆத்துமாக்களை ஆதாயம் செய்து முதலீடு செய்கிறோமா ? இந்த வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கும் பாடுகளை எவ்வாறு பார்க்கிறோம்? 

 

கிறிஸ்துவும் நமக்காக சிலுவையிலே பாடுபட்டார். அதன் மூலம் பூரண சமாதானம், அன்பு, பாவ மன்னிப்பு, நித்திய ஜீவனை நமக்குத் தந்தார். இயேசுவின் சரீரப் பாடுகளும் சிலுவை வேதனைகளும் தாங்க முடியாமல் இருந்தாலும் கூட நம்முடைய பிரயோஜனத்திற்காக அதை எற்றுக்கொண்டாரே! அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தவராய் இன்று பிதாவின் சிங்காசனத்தில் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். (எபி. 12:2).    

 

வேதத்தில், அப்போஸ்தலனாகிய பவுலைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டு ஊழியம் செய்தவர். ஆனால் அவருடைய வாழ்க்கையில் பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் அவரை அனுப்பியவருடைய வேலைக்காய் (2கொரி 11:28) அவர் பட்ட பிரயாசம் இதில் வெளிப்படுகிறது. அப்படியானால் அவருடைய பாடுகளில் கிறிஸ்துவையும் பார்க்கிறோம். அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலர்களும் இவ்வளவு பாடுகளோடு வாழ வேண்டுமானால் நாம் எம்மாத்திரம்? 

 

தேவபிள்ளைகளே, நீங்கள் ஒருவேளை பாடுகளின் வழியாய் கடந்து செல்கிறீர்கள் என்றால் வாழ்வை வெறுத்துவிடாதீர்கள். அவைகள் உங்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் அல்லவா அழைத்துச் செல்கிறது. இவ்வுலகப் பாடுகள் நிலையானது அல்ல. ஆகவே, இந்த ஒரே ஒரு வாழ்க்கைப் பாடுகளின் மத்தியிலும் பரமனுக்கும், பிறருக்கும் பிரயோஜனமாய் வாழ்ந்து முடிப்போம்.

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

ஜெபக்குறிப்பு:   

சங்கிலித்தொடர் ஜெபத்தில் இணைந்துள்ள ஒவ்வாருவரையும் ஜெப ஆவியினாலும், ஆத்துமா பாரத்தினாலும் தேவன் நிரப்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet