Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-05-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 10-May-2022

இன்றைய தியானம்(Tamil) 10-05-2022

 

எபெத்மெலேக் எங்கே?     

 

“தைரியமாயிரு, நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்கவும் சவுரியத்தைக் காட்டுவோம்.” - 2சாமுவேல் 10:12

 

தன்னுடைய 17 ம் வயதில் கடும் எதிர்ப்பின் மத்தியில் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக குமார் ஏற்றுக் கொண்டான். பின்பு தனது உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லாருக்கும் இயேசுவின் அன்பை உற்சாகமாய்க் கூறினான். சிலர் அதை கவனித்துக் கேட்பார்கள். ஆனால் பலரோ அவனைக் கிண்டல் செய்து திட்டி அனுப்பி விடுவார்கள். இதனால் பயந்து மனமுடைந்த அவன் இனி நான் மட்டுமே ஆண்டவரைத் தேடுவேன், யாருக்கும் சொல்லப் போவதில்லை என முடிவு செய்தான். தனது கல்லூரிப் படிப்பை முடித்த அவன் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். அங்கு துரை என்ற நண்பனுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்லும்படி குமாரை ஆண்டவர் ஏவினார். ஆனால் அவனோ தன் மனதைக் கடினப்படுத்திக் கொண்டு துரை என்னைக் கேலி செய்துவிடுவான் என்று நினைத்து தன்னுடைய நண்பனுக்குச் சொல்லவேயில்லை. ஒரு நாள் வாகன விபத்தில் துரை அகால மரணமடைந்து விட்டான். இதைக் கேள்விப்பட்ட குமாருடைய உள்ளம் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டது. மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகி அவன் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கே சில வருடங்கள் ஆனது. இதற்குக் காரணம் சுவிசேஷம் அறிவிப்பதில் குமாருக்கிருந்த பயமும் தைரியமின்மையுமே.

 

தீர்க்கதரிசியாகிய எரேமியா தன் காலத்தில் வாழ்ந்த யூத மக்களுக்கும் இராஜாவுக்கும் விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தபோது அவனை ஒரு உளையான கிணற்றிலே போட்டார்கள். அவன் அதில் அமிழ்ந்து மரணத்திற்குச் சமீபமான போது எபெத்மெலேக் என்கிற மனிதன் தைரியமாய் இராஜாவினிடத்தில் எரேமியாவை விடுதலை செய்யும்படி கேட்டு, அவன் உயிரைக் காப்பாற்றினான். ஒரு இராஜ்ஜியமே எரேமியாவைக் கொல்ல முயற்சி செய்த போது அவனைக் காப்பாற்றிய எபெத்மெலேக் என்கிற மனிதனின் துணிச்சலும் தைரியமும் பாராட்டத்தக்கது.

 

அன்பானவர்களே, ஒருவேளை எரேமியா இறந்திருந்தால் தேவ சமூகத்தில்தான் இருந்திருப்பான். ஆனால் இன்றைக்கு இருக்கும் ஜனங்கள் பாவ சேற்றில் வீழ்ந்து நித்திய மரணத்திற்குச் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்களைத் தூக்கிவிட குமாரைப் போல பயமும் வெட்கமும் நிறைந்தவர்களாய் ஒதுங்கிப் போகிறோமா? துணிச்சலும் தைரியமும் நிறைந்த எபெத்மெலேக் எங்கே?

- S. மனோஜ்குமார்

 

ஜெபக் குறிப்பு:

மிஷனரிகள் தங்கி பயிற்சி பெறுவதற்கென்று ஒரு “மிஷனரி வீடு” கட்டுவதற்கென்று தேவைப்படும் ரூ.2 இலட்சம் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet