By Village Missionary Movement
Monday, 09-May-2022இன்றைய தியானம்(Tamil) 09-05-2022
மங்கையின் தீர்மானங்கள்
“அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.” – நீதி. 31:29
1. இளமைக்குரிய இச்சைகளுக்கு விலகியோடத் தீர்மானிக்கிறேன். என்னுடைய சிந்தனைகளைத் தூய்மையாகக் காத்துக்கொள்ள விடாமுயற்சி எடுப்பேன். என் உடலை பரிசுத்தமாய் காத்துக்கொள்வேன். தேவையற்ற எந்தவொரு தொடுதலையும் தவிர்ப்பேன். இச்சையான பார்வையைத் தவிர்க்க என் கண்களோடு உடன்படிக்கை பண்ணுகிறேன்.
2. உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் படங்கள், கதைகள், உரையாடல்கள், வார்த்தைகள், விளையாட்டுப் பேச்சுகள், பாவனைகளைத் தவிர்க்கத் தீர்மானிக்கிறேன். பாவத்திற்கு என்னை நடத்தக் கூடிய நபர்களையும், இடங்களையும் தவிர்ப்பேன்.
3. என் பழைய பாவங்களைக் குறித்துச் சாத்தான் என்னைக் குற்றஞ்சாட்ட இடங்கொடாமல், கடந்த காலக் காரியங்களை புதைத்து விடத் தீர்மானித்தேன். என் பாவத்தை ஆராய்ந்து பார்த்து என்னை வீழ்ச்சிக்கு வழி நடத்தின காரணத்தை முன்னிட்டும் அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகாதபடி நடந்துகொள்ளுவேன்.
4. எந்த மனிதனையும் சோதனைக்கு உட்படுத்தாதிருக்கத் தீர்மானிக்கிறேன். கண்ணியமாய் உடையுடுத்தி என் நடவடிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையாயிருப்பேன். ஒருவருக்கு என்மேல் விருப்பமாயிருப்பதாக உணர்வேனானால் அவருக்காக ஜெபித்து அவரை விட்டு விலகுவதில் அவருக்கு ஒத்தாசை செய்வேன். அதனால் அவர் மனம் நொந்தாலும் அதைப் பொருட்படுத்தமாட்டேன். அவரோடு தனித்திருப்பதைத் தவிர்ப்பேன்.
5. கற்பில் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாயிருக்கத் தீர்மானிக்கிறேன். எனக்குப் பாவமாகத் தோன்றாவிட்டாலும் அவர்களுக்கு இடையூறாயிருக்கும் எதையும் தியாகம் செய்வேன். தேவனிடமிருந்தும் மனிதரிடமிருந்தும் நற்சாட்சி பெறுவேன். பிறர் கண்டிக்கும் போது பணிவுடன் ஏற்றுக்கொள்வேன்.
6. எந்தத் தேவ ஊழியர்களையும் தேவதூதனென்று எண்ணாமல் விழுந்து போகக் கூடிய மனிதனாகவே நோக்கத் தீர்மானிக்கிறேன். ஊழியக்காரரோடு தனிப்பட்ட உறவு உருவாக்குவதைத் தவிர்ப்பேன். கடிதமெழுதினாலும் அவை குறிப்பாக சுருக்கமாக இருக்கும்.
7. பரிசுத்தத்தையே என் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளத் தீர்மானிக்கிறேன்.
8. அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு, நானோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவளாவதையே தீர்மானமாகக் கொள்ளுகிறேன்.
- அவள் தீர்மானங்கள் ” Dr. லில்லியன் ஸ்டான்லி அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.
ஜெபக்குறிப்பு:
ஒரு கிராமத்தில் VBS நடத்த தேவைப்படும் ரூ 5000/- கொடுத்து தாங்கும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250