Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-05-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 08-May-2022

இன்றைய தியானம்(Tamil) 08-05-2022 (Kids Special)

 

குயில்பாட்டு

 

“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.” - சங்கீதம் 34:1

 

ஹலோ குட்டீஸ்! பறவைகளின் சத்தத்தைக் கேட்டிருக்கீங்களா? நான் கேட்டுருக்கிறேன். குயில் பாடும்..., சேவல் கூவும்.. காகம் கரையும்... கிளி பேசும். அதைக் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்போ இரண்டு குயில்களே பேசிக் கொண்டிருக்கிறது. வாங்க வாங்க குட்டீஸ் என்ன பேசுறாங்கன்னு கேட்கலாம்.      

 

அழகான மரக்கிளையில் இரண்டு குயில்கள் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து ஆண்டவரைத் துதித்துப் பாடும். ஒரு குயில் பாடுவதை நிறுத்தி மற்ற குயிலிடம் அங்கே கீழே பாரேன் எத்தனை மனிதர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள், சிலர் வேலைக்குப் போறாங்க, சிலர் வங்கிக்குச் சென்று நிறைய பணம் சம்பாதிக்கிறாங்க. குட்டீஸ் ஸ்கூலுக்கு போறாங்க ...உங்களைத்தான் சொல்லுது பாருங்களேன். ஆமா... அங்கே பாரேன் என்று இன்னொரு குயில் பேச ஆரம்பித்தது. மூன்று மாடி வீடு கட்டிக் கொண்டிருக்காங்க, சிலர் ஹோட்டலுக்கு போய்க் கொண்டிருக்காங்க, ஆனா அவர்கள் முகத்தில் ஏன் சந்தோஷம் இல்லை. யாருமே சிரிக்கக்கூட மாட்டேங்கிறாங்க. நம்மைப்போல ஆண்டவரைத் துதித்துப் பாடக்கூட மனம் இல்லையே. ஏன் இவங்க எல்லாம் இப்படி இருக்கிறார்கள்... சந்தோஷப்படுகின்ற அளவுக்கு நம் கையில் செல்போன் இல்லை ஆனா நாம் எவ்வளவு சந்தோஷமா ஆண்டவரைப் பாடித் துதிக்கிறோம்.

 

அடுத்த வேளை சாப்பாடு கூட இல்லைதான்... இப்படி யோசித்துக் கொண்டிருந்த இன்னொரு குயில் சொன்னது நமக்கு ஒரு பரம தந்தை இருப்பது போல அவர்களுக்கு இல்லையோ என்னவோ என்று சொல்லி தங்கள் உரையாடலை முடித்து விட்டு கூ..கூ..குக்கூ... என்று ஆண்டவரைப் போற்றிப்பாட ஆரம்பித்தது.

 

குட்டிப்பிள்ளைகளே! குயில் உங்களைப் பார்த்துப் பேசியிருந்தால் எங்களைப் போலவே நீங்களும் காலையிலேயே எழுந்து ஆண்டவரைத் துதித்துப் பாடுங்கன்னு சொல்லும். அப்படித்தானே. உங்கள் தேவைகளை எல்லாம் அறிந்த பரம பிதாவான இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் முதல் நேரத்தைக் கொடுக்கும் போது அவர் சந்தோஷப்பட்டு உங்களை ஆசீர்வதிப்பார். என்ன குட்டீஸ் இயேசப்பாவை துதித்துப் பாட ரெடிதானே.. ம்..ம்.. சூப்பரோ சூப்பர் பை..

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet