Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-05-2022
Share:

By Village Missionary Movement

Saturday, 07-May-2022

இன்றைய தியானம்(Tamil) 07-05-2022

 

துர்க்குணம்       

 

“சகலவிதமான கசப்பும்... மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது” - எபேசியர் 4:31 

 

ஆங்கில வார்த்தையில் துர்க்குணம் என்பதன் பொருள் malice. இதன் அர்த்தம் தீய நோக்கம் அல்லது பிறருக்குத் தீங்கு செய்யக் கொண்டுள்ள ஆசை என்பதாகும். அதாவது நாம் வெறுக்கும் நபரை ஏதாவது ஒரு வகையில் தாக்குவதைக் குறிக்கும். தன்னை வணங்காத மொர்தெகாயை குலத்தோடு அழிக்க ஆமான் தீட்டிய சதித்திட்டம்! குற்றமில்லாத நாபோத்தை யேசபேல் நயவஞ்சகமாகக் கொன்றது! உதவி கேட்டு வந்த தாவீதின் ஆட்களை நாபால் அவமானப்படுத்தி அனுப்பியது!.... எல்லாம் துர்க்குணத்தின் வெளிப்பாடாகும். ஒருவேளை இவர்களெல்லாம் மிகுந்த ஞானமாக நடந்து கொண்டதாக நினைத்திருக்கலாம். ஆனால் இவ்வித ஞானம் பேய்த்தனத்துக்கு அடுத்தது என்று யாக்கோபு 3:15 -ல் வாசிக்கிறோம்.                                         

 

ஒருவரை மனமடியச் செய்ய அவமானப்படுத்த எதைச் செய்தாலும் அது துர்க்குணமே. மொட்டைக் கடிதம் எழுதுதல், வதந்திகளைப் பரப்புதல், கோள் சொல்லுதல், அயலார் பேரில் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுத்துப் பரப்புதல், நாம் வெறுக்கும் நபர்களின் நற்குணங்களையும் பாராட்டாதிருத்தல், அவர்கள் செயலை குற்றம் கண்டுபிடித்தல் எல்லாமே துர்க்குணம் தான். 

 

தீய நோக்கம் பாவமாம் என்று நீதிமொழிகள் 24:9 –ல் வாசிக்கிறோம். சீப் ஊரார் வனாந்தரத்தில் ஒளிந்திருந்த தாவீதை, ராஜாவாகிய சவுலைப் பிரியப்படுத்தக் காட்டிக் கொடுத்ததைப் போல, உயர் ஸ்தானத்தில் இருப்பவர்களைப் பிரியபடுத்த நியாயமற்ற செயல்களைச் செய்தலும் துர்க்குணமே. யோசேப்பு நீதிமானாயிருந்தபடியால் மரியாளை அவமானப்படுத்தாமல் இரகசியமாகத் தள்ளிவிட மனதாயிருந்தார் என்று வேதம் கூறுகிறது. ஆம்! நீதிமான்கள் துர்க்குணத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். 

 

நம் துர்க்குணத்தை வெளிப்படுத்த எல்லா சுதந்திரமும் நமக்கு உண்டு. ஆனால் அப்படிச் செய்யாதிருக்க தேவனுக்கு நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுத்து விட வேண்டும் (1 பேதுரு 2:16). கீழ்ப்படிவோமா?

- Mrs. கீதா ரிச்சர்ட்          

 

ஜெபக்குறிப்பு: 

கிராமங்களில் VBS எடுப்பதற்கென்று ஆயத்தமாக நாம் you tube -ல் வெளியிடவிருக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் கிராமங்களில் சிறுவர் ஊழியம் செய்யும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al