By Village Missionary Movement
Sunday, 01-May-2022இன்றைய தியானம்(Tamil) 01-05-2022 (Kids Special)
விடுமுறை சந்தோஷம்தானா?
“உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்...” - சங்கீதம் 143:10
Hai kutties! எல்லோருக்கும் School Leave தானே Jollyயாக விதம் விதமாக விளையாடுவீங்க தானே! சிபி , ஜெரி, நேட் என்ற மூன்று friendsம் leaveல் என்ன பண்ணலாம் என யோசிச்சாங்க.
நேட் சொன்னான் “சிபி, ஜெரி எங்க வீட்டுப் பக்கத்துல விடுமுறை வேதாகமப் பள்ளி நடத்தப் போறாங்க. நிறைய பாடல்கள், கதைகள், skit, நிறைய snacks என்று Jolly-யாக இருக்குமாம். உங்க friendsஐயும் கூட்டிட்டு வாங்க என்று பாரதி டீச்சர் சொன்னாங்க. நாம் மூன்று பேரும் சேர்ந்து Jollyயா இருப்போம் வாங்களேன்” என்று கூப்பிட்டான்.
சிபி “நான் எங்க மாமா வீட்டுக்குப் போறேன் வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டான். ஜெரி, “நான் அம்மா கூட Vanல் சுற்றுலா போகிறேன். நிறைய இடங்கள் இயற்கை காட்சிகள் பார்க்கலாம். அருவியில் குளிக்கலாம், Boating போகலாம்” என்று சொல்லிவிட்டான். எனவே மூவரும் “Happy Holidays” சொல்லிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
விடுமுறை முடிந்து School-க்கு வந்தனர். நேட் மிகவும் சந்தோஷமாக தான் VBS-ல் படித்த பாடல்களைப் பாடினான், விதவிதமாக Snacks சாப்பிட்டதையும், நிறைய Friends கிடைத்ததையும், vbs மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன் Picnic கூட கூட்டிக் கொண்டு போனாங்க என்று கூறினவுடன் சிபிக்கும் ஜெரிக்கும் கவலையாகிவிட்டது.
சிபி சொன்னான் “மாமா பையன் அவனது விளையாட்டு ஜாமான்கள் ஒன்றைக் கூட தொடக்கூடாது என்று சொல்லி விட்டான். மாமாவும், “வெளியே கூட்டிக்கொண்டு செல்ல எனக்கு Time இல்லையே” என்று கூறினார். Beach, Zoo, Swimming pool என்று ஒரு இடமும் போக முடியவில்லை” என்று கவலையுடன் கூறினான்.
ஜெரி சொன்னான் “சுற்றுலா வந்த இடத்தில் மற்றவர்கள் எல்லாம் தங்களது பிள்ளைகளுக்கு நிறைய விளையாட்டு ஜாமான், Snacks என்று வாங்கிக் கொடுத்தனர். அம்மாவிடம் பணம் இல்லாததால் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் boating, falls, இயற்கை காட்சிகள் ஒன்றையும் enjoy பண்ண முடியல“ என்று சோர்வாகச் சொன்னான்.
நேட், “ok friends Quarterly exam leave-ல் சிறுவர் முகாம் நடத்தப் போறாங்களாம். நாம் மூவரும் Jolly-யாக போவோம் கவலைப்படாதீங்க” என்றான். செல்லக்குட்டீஸ் நீங்களும் விடுமுறையில் பக்கத்துல உள்ள VBS-க்கு சென்று சந்தோஷமாக இருப்பதற்கு தீர்மானம் எடுத்துட்டீங்களா ok! Bye! God Bless You!
- Sis A. பியூலா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250