Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-04-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 28-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 28-04-2022

 

கொடுங்கள்

 

“...நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.” - லூக்கா 6:38 

 

என்னுடைய 23வது வயதினிலே, ஒருநாள் சிறுவர் ஊழியத்திற்காக பள்ளியிலுள்ள சிறு பிள்ளைகளுக்கு என்னுடைய சாட்சியை சொல்லும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். கிட்னி செயலிழந்தது மாற்று அறுவை சிகிச்சை செய்தது இதையெல்லாம் இந்த சின்ன பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்று இயேசு அப்பாவிடம் ஒரு நிமிடம் ஜெபித்துவிட்டு, கர்த்தருடைய கிருபையால் சொல்லி முடித்தேன். பையாப்சி, டையாலிசிஸ் ஆகியவற்றை மேலோட்டமாக சொன்னேன். கதை, பாடல், நடனம், ஸ்கிட் எல்லாம் முடிந்த பிறகு 8ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுபிள்ளை தயங்கித் தயங்கி என்னிடத்தில் வந்தாள், “அண்ணா உங்க சாட்சி எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருந்திச்சு, கர்த்தர் எங்கிட்ட சொன்னாங்க உன்கிட்ட இருக்கிற காச காணிக்கையா கொடுத்துவிடு” என்று சொல்லி அவளிடம் இருந்த இரண்டு ரூபாயை தயங்கியபடி என்னிடம் கொடுத்தாள். அவள் மீண்டும் “அண்ணா இது எங்க அம்மா எனக்கு மிட்டாய் வாங்க கொடுத்தாங்கண்ணா” என்றும் சொன்னாள். நான் உடனே, ”எனக்கு மேல ஒரு அண்ணே வந்திருக்காங்க அவங்ககிட்ட கொடு” என்று சொன்னேன். அவள் தயங்கி வெட்கப்பட்டு 2 ரூபாயை அந்த அண்ணனிடம் கொடுத்தாள். அதை சந்தோஷமா வாங்கி கொண்டு அவளுக்காக ஒரு ஜெபம் செய்தார்கள். அந்த சிறு பெண்ணிடம் இருந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

 

இதைப் பார்த்த எனக்கு மிகுந்த ஆச்சரியம். இந்த சிறு வயதில் இயேசப்பாவினுடைய குரலைக் கேட்டு உடனே கீழ்ப்படிகிற குணத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இதே இடத்தில் நானாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் என்று யோசித்தேன். வேதத்திலே, இயேசு கிறிஸ்துவினால் அற்புதத்தைப் பெற்றுக்கொண்ட அநேகர், உடனே அவருக்குப் பின் சென்றனர், அதாவது உடனே தங்கள் வாழ்வை தேவனுக்கு அர்ப்பணித்தனர் என்று வாசிக்கிறோம். ஆனால் இன்னும் நம்மில் அநேகர் தேவனுடைய வார்த்தையை முழு மனதோடு கேட்பதில்லை. கேட்பவர்களில் அநேகர் அதற்குக் கீழ்ப்படிய ஆயத்தமாக இல்லை.

 

அன்பானவர்களே! தேவனுடைய வார்த்தையைக் கேட்டு செயல்படும் இருதயம் நமக்கு வேண்டும். காணிக்கை கொடுப்பது மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கை, நேரம், இளமை, தாலந்து என இப்படி எதைக் கொடுத்தாலும் தேவன் நிச்சயமாகவே நமக்கு அதை இரண்டத்தனையாக திரும்பத் தருவார். அது இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் நமக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும்.

- P.பிரவீன் 

 

ஜெபக்குறிப்பு

தமிழ்நாட்டில் ஆலயம் இல்லாத ஆயிரம் கிராமங்களில் ஆலயம் கட்டுவதற்கென எடுக்கப்படும் பிரயாசங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş