Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  26-01-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 26-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  26-01-2021

எனது தேசம் 

“...கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்.” – 1தீமோ. 2:2

அமெரிக்காவின் மிகச் சிறந்த மருத்துவரான ஜான் ஸ்கடர், ஒரு  நாள் இரவு வியாதியஸ்தர் ஒருவரைக் காண ஒரு வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த வீட்டின் மேஜையில் இருந்த ஒரு சிறிய புஸ்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். 60 கோடி மக்களின் உரிமைக் குரல் என்ற தொகுப்பில் இந்தியாவில் பல இலட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி தெரிய வந்தது. இப்படிப்பட்ட மக்களுக்காக யார் போவார் என்ற வார்த்தை ஜான் ஸ்கடருடைய உள்ளத்தை அசைத்தது. கர்த்தர் தன்னை அழைக்கிறார் என அதற்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தார். அப்போது அவரது தகப்பன் “நீ இந்தியாவிற்குச் சென்றால் என் மகன் அல்ல, உனக்கு என் சொத்தில் பங்கு கிடையாது” என்றார். ஆனால் ஜான் ஸ்கடர் இதனை பொருட்படுத்தாது அவரது மனைவி ஹெரியட் மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் இந்தியா வந்தார். சில நாட்களில் அவரது இரண்டு வயது குழந்தை இறந்துவிட்டது.  அதன்பின் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன. ஆனாலும் அவர் தொடர்ந்து இந்தியாவில் மருத்துவப் பணி செய்து கொண்டு வந்தார். ஜான் ஸ்கடருக்கு 7 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 7 ஆண் பிள்ளைகளையும் குறிப்பிட்ட வயதிற்குப் பின் அமெரிக்கா அனுப்பி மருத்துவப் படிப்பு படிக்க வைத்தார். மருத்துவப்படிப்பு முடித்ததும் அவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பி மருத்துவப்பணி செய்ய வைத்தார். 6வது குழந்தைதான் வேலூர் C.M.C. மருத்துவமனை நிறுவனர் ஐடா ஸ்கடர் ஆவார். ஜான் ஸ்கடரே இந்தியா வந்த முதல் அமெரிக்க மருத்துவ மிஷனெரி ஆவார். 

மோசே வனாந்திரத்தில் ஆடுகளை மேய்க்கும்போது முட்செடியில் எரிகிற அக்கினியின் நடுவில் தேவன் தோன்றி, “உன் ஜனத்தை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அழைத்து நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்ற போது மோசே சம்மதிக்கவில்லை. தேவன் நீண்ட நேரம் பேசின பின்தான் ஒத்துக்கொள்கிறார். 

வாலிபனே! இன்றும் உன்னை சுற்றி நடக்கிற சம்பவங்களைப் பார்க்கும்போது ஆட்சி சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை எனக் கூறுகிறீர்களா? என் தேசம் என் ஜனம் என்ற எண்ணம் ஏன் உனக்கு வரவில்லையா? அமெரிக்காவில் பிறந்த ஜான் ஸ்கடருக்கு இந்தியாவின் மேல் இருந்த பாரம் ஏன் நமக்கு வரவில்லை. நீ உன் தேசத்தை நேசிக்கிறாயா? தேசத்திற்காக நீ என்ன செய்திருக்கிறாய்? சிந்தித்துப் பார். குறைந்தது தேசத்திற்காக நேரம் ஒதுக்கி ஜெபிக்கிறாயா? ஜெபமே நம் தேசத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும். இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! 
-    Mrs. அன்புஜோதி ஸ்டாலின் 

ஜெபக்குறிப்பு:
Day care centre மூலம் குழந்தைகளை பொறுப்பெடுத்த குடும்பத்தினரை தேவன் அபரிவிதமாய் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al