Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26-04-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 26-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 26-04-2022

 

முன்னோக்கி ஓடு

 

“முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம்” - ஏசாயா 43:18

 

ஒருமுறை ஒரு மனிதர் பெரிய உயரமான கோபுரத்தின் மேல் ஏறினார். அவருக்கு உயரம் என்றால் பயம். அந்த பயத்தைப் போக்கவே அவர் மேலே ஏறிக் கொண்டிருந்தார். மேலே ஏறியவர், மேல் நோக்கி சென்றிருக்க வேண்டும். ஆனால் அவரோ கீழே குனிந்து எவ்வளவு உயரம் ஏறியிருக்கிறோம் என்று பார்த்தார். அவ்வளவுதான், உயரத்தைப் பார்த்ததும் தலை சுற்றி கீழே விழுந்து மரித்துப்போனார்.

 

நாமும் கூட பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையின் கடந்த காலங்களில் நடந்தவற்றையே நினைத்துக் கொண்டு முன்னோக்கி செல்லாமல் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் வேதம் தெளிவாக கூறுகிறது. “முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” (ஏசாயா 43:18,19) வேதம் பழையவைகளை மறக்கும்படியாக நம்மிடம் கூறும்போது, நாம் அதையே சிந்தித்துக் கொண்டு இருப்போம் என்று சொன்னால் நிச்சயமாகவே நம்மால் தேவன் தருகின்ற புதிய வாழ்வை, புதிய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முடியாமல் போய்விடும்.

 

இதற்கு வேதத்தில் ஒரு சரியான எடுத்துக்காட்டு லோத்தினுடைய மனைவி. ஆண்டவர் அவர்கள் மேல் அற்புதமாய் கிருபை வைத்து அவர்களைக் காப்பாற்றும்படி அவர்களை வெளியே அழைத்துக் கொண்டு போனபோது, அவள் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவளாய், பின்னிட்டு பார்க்கிறாள். அதனால் அந்த இடத்திலேயே உப்புத்தூணாய் மாறிப்போனாள். தேவன் அவர்களுக்கென வைத்திருந்த அந்தப் புதிய வாழ்வை இழந்துபோனாள்.

இந்நாளில் நாம் நம்மை சீர்தூக்கிப் பார்ப்போம். ஒரு வேளை நாமும் கூட லோத்தினுடைய மனைவியைப் போல, விட்டு வந்த உலகக் காரியங்களை பின்னிட்டுப் பார்த்துக் கொண்டிருப்போம் என்று சொன்னால், நம்மை தேவனிடம் ஒப்புக்கொடுப்போம். பின்னானவைகளை மறந்து முன்னோக்கி ஓடுவோம். பழையவைகள் ஒழியட்டும், அவைகளை மறப்போம். அவைகளை நினைக்கவோ, சிந்திக்கவோ வேண்டாம். புதிய காரியத்திற்கு நேராய் நடத்தும் தேவனை நோக்கி முன்னோக்கி ஓடுவோம். ஆமென்.

- R.பிரின்ஸஸ். 

 

ஜெபக்குறிப்பு:

பசித்தோருக்கு உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் சந்திக்கப்படும் நபர்கள் ஆண்டவரை அறிந்து கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş