Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-04-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 24-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 24-04-2022 (Kids Special)

 

மாறாதவர்

 

“நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.’’ - மல்கியா 3:6

 

காட்டிலுள்ள பலவிதமான பறவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு மரத்தடியில் மாநாடு போட்டதாம். அதற்கு நம்முடைய தேசிய பறவை தான் தலைமை தாங்கியதாம். என்ன குட்டீஸ் உங்களுக்கு தேசிய பறவை எதுன்னு தெரியுமா? ம்ம்... மயில்! மறக்காம ஞாபகம் வைத்திருக்கணும் Ok. என்ன நம்ம இனத்தில் சில பறவைகளையே காணோமே என வருத்தப்பட்டது மயில். இதைக் கேட்ட கழுகு எங்கள் இனமும் குறைந்து விட்டது. இராஜாக்கள் போல கிராமங்கள் தோறும் சுற்றி வருவோம். இப்போ அதுவும் போச்சு என்றது. உடனே மயில் காகத்தைப் பார்த்து என்ன தம்பி நீ அதிகமாக ஊருக்குள் போய் வீடுகளை சுற்றிப் பார்த்து வருவாயே. அங்கும் பறவைகளின் நடமாட்டம் குறைந்து விட்டதென்று சொல்லுகிறார்களே இதற்கு காரணம் என்ன உனக்கு தெரியுமா? என்றது.

 

உடனே காகம் என்னத்த சொல்றது, உலகில் பலவிதமான கண்டுபிடிப்புகள் என்று ஏதேதோ மருந்துகளை வாங்கி பயிர்களுக்கு தூவுவதால் புழு, பூச்சியெல்லாம் செத்து போயிடுது... பலவிதமான ஆயில்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. அதுமட்டுமா மனிதர்கள் Use பண்ற Cell phone மூலமா நம்ம இனம் குறைந்து போய் விட்டது என்று காகம் சொன்னதும், எல்லா பறவைகளும் ஆமா உண்மைதான் என்றது. இதைக் கேட்ட மயில் அந்த காலத்தில் நான் தோகை விரித்து ஆடினால் சிறுபிள்ளைகள், ஏன் பெரியவர்கள் கூட நின்று ஆனந்தமாய் ரசித்துப் பார்ப்பார்கள். இப்பொழுதெல்லாம் அவங்க போடுற டிரஸ்ஸே பளிச்...பளிச்...னு மின்னுதே... யாரும் என்னை கண்டு கொள்வதே இல்லை என்று தன் சோகக் கதையை சொல்லி முடித்தது. பட்டுனு ஒரு சிட்டுகுருவி சொன்னது, இயற்கை உலகம் செயற்கை உலகமா மாறிப் போயிடுச்சு அப்படித்தானே என்றதும் மற்ற பறவைகளெல்லாம் நீ இவ்வளவு சிறிய சிட்டு குருவியாயிருந்தும் உலகத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கிறாயே என்று கூறி விட்டு எல்லா பறவைகளும் சிரித்தது. இந்த உலகமும், மனிதர்களும் மாறிவிடுவார்கள். ஆனால் நம்மைப் படைத்த தேவன் ஒருநாளும் மாறவே மாட்டார் என்று மயில் சொன்னது. மற்ற பறவைகளும் Yes என்று சொல்லி நம்மை அனுதினமும் போஷித்து காப்பாற்றுகிற ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம் என்று அந்த மாநாட்டை முடித்துக் கொண்டது.

       

அருமையான தம்பி, தங்கச்சி பறவைகள் பேசிக் கொண்டதை கேட்டீங்களா? எல்லாமே மாறி விடும். இயேசு ஒருவர் தான் மாறாதவர் என்று பறவைகள் கூட தெரிந்து வைத்திருக்கிறது பார்த்தாயா? மாறாத தேவனை மறந்து விடக்கூடாது. மாறிப் போகும் மனிதர்களை தேடி போகக் கூடாது. இயேசப்பாவை தேடி உண்மையான சந்தோஷத்தை பெற்றுக் கொள்ள ready தானே super!

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş