Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-04-2022
Share:

By Village Missionary Movement

Saturday, 23-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 23-04-2022

 

என் நேரம் எங்கே?

 

“…நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?” - மத்தேயு 26:40

 

ஒருமுறை ஒரு கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கணவர், “நீ எப்போதும் பிஸியாக இருக்கின்றாய், என்னோடு பேசுவதும் இல்லை, நேரம் செலவிடுவதும் இல்லை. ஒன்று அலுவலகத்தில் இருக்கின்றாய் இல்லையெனில் வீட்டிற்கு வந்து போன் அல்லது லேப்டாப் மூலமாக உன் வேலைக்குரிய காரியங்களை செய்கிறாய். எனக்கு என்ன தேவை, நான் என்ன விரும்புகிறேன், நான் எப்படி இருக்கிறேன் எதைப்பற்றியும் சிறிதும் கவலையில்லாமல், உன் தேவையை மட்டும் ஒரிரு வரிகளில் கூறி சென்றுவிடுகிறாய்’’ என்றார். அந்த மனைவி அதைக் குறித்து சற்றும் உணர்வில்லாமல் மீண்டும் தன் வேலையை செய்தாள்.

 

ஆம், ஒரு கணவன், மனைவி உறவின் ஆழம் அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் நேரத்தைப் பொறுத்து தான் அமையும். வேதத்தின்படி, நாம் தேவனுடைய மணவாட்டிகள்! ஆனால் நாம் நம் மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவோடு ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம்? பத்தில் ஒன்று தேவனுக்கு என்று சொல்லுவார்கள். உண்மையாய் நாம் சிந்தித்துப் பார்ப்போமானால் நாம் ஒருமணி நேரத்தைக் கூட தேவனுக்கு என்று ஒதுக்க கஷ்டப்படுகிறோம். இந்த நாட்களில் நாம் தேவனுக்குக் கொடுக்கும் நேரத்தைக் குறித்து சிந்திப்போம்.

 

அடுத்ததாக, நம் குடும்பம், நாம் இருக்கின்ற இந்த பிஸியான உலகில் குடும்ப ஐக்கியம் என்பது வெறும் ஒரு சமூக கட்டமைப்பாக மட்டுமே உள்ளது. அதில் அன்பு, சந்தோஷம், சமாதானத்தை விடவும் சண்டை, கசப்பு என எதிர்மறை காரியங்களே நிறைந்திருக்கின்றன. முற்காலங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, அன்றைய நிகழ்வுகளை பேசி மகிழ்வது என்பது போன்ற காரியங்கள் குடும்பங்களில் இருந்தது. அவற்றின் மூலமாக அவர்கள் ஒன்றாக செலவிடும் நேரமும் அதிகம் இருந்தது. இவை கணவன் மனைவிக்கு இடையே நல்ல ஐக்கியத்தை உண்டாக்கின. இந்நாட்களில் சமூகவலைதளத்தின் மூலம் சமூகத்தில் நடக்கும் நல்லதை கெட்டதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்கிறோம். ஆனால் வீட்டின் காரியங்கள் நமக்குத் தெரிவதில்லை.

 

பிரியமானவர்களே, தேவன் இதை வாசிக்கின்ற ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி, என் நேரம் எங்கே? இந்த நாளில் உங்கள் நேரத்தைக் குறித்து சிந்தியுங்கள். தேவனுடையதை தேவனுக்கும், குடும்பத்தினுடையதை குடும்பத்திற்கும் நாம் கொடுக்கும் போது நிச்சயமாகவே நம் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

- R. ராக்ஸன்

 

ஜெபக்குறிப்பு:

‘’கழுதைகள் கையேடு’’ என்று ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக வெளியிடப்படும் பத்திரிக்கையின் மூலம் தரமுள்ள ஊழியர்கள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al