Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22-04-2022
Share:

By Village Missionary Movement

Friday, 22-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 22-04-2022

 

நம்பினவர்கள் கைவிட்டால்...

 

“மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.’’ - சங்கீதம்118:8

 

1991ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று “MTS ஒஷனோஷ்’’ என்னும் உல்லாச பயணக்கப்பல் தென்னாப்பிரிக்க கடற்கரைக்கு அப்பால் ஒரு ஆபத்தான புயலில் சிக்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு கப்பலுக்குள் உள்ள ஆபத்தை தெரிவிக்காமல் அக்கப்பலின் கேப்டன் கப்பலை தனியே விட்டுவிட்டு தன் சக அதிகாரிகளுடன் தப்பிச் செல்ல தீர்மானித்தான். அதில் பயணம் செய்த ஆங்கிலேய இசை மேதை மோஸ் ஹில்ஸ் ஏதோ ஆபத்து ஏற்பட இருக்கிறது என்பதை அறிந்து, தென்னாப்பிரிக்க கடலோர காவல் படையினருக்கு பாதுகாப்பு சமிக்ஞை மூலம் தகவலை அனுப்பினார். தகுந்த நேரத்தில் உடனடியாக செயல்பட்டு செய்தியை அனுப்பினதால் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் அந்தக் கப்பலுக்கு விரைந்தனர். அற்புத விதமாக ஒருவருக்கும் உயிர்சேதம் இல்லாதபடி அனைவரும் மீட்கப்பட்டனர்.

 

நம்மைப் பாதுகாக்கும் நபர்களோ அல்லது நம்மை வழி நடத்துபவர்களோ நம்மை தனியே விட்டு விட்டால் என்ன செய்ய முடியும்? வேதாகமத்தில் இது போன்ற சம்பவங்களை அநேக இடங்களில் காண முடியும். யாரெல்லாம் நம்பிக்கையின் அரணாக ரட்சகனாக காணபட்டார்களோ, அவர்களே தம்மை நம்புகிறவர்களுக்கு ஆபத்தானவர்களாக மாறியிருக்கிறார்கள். இந்த செய்தியை வாசித்து கொண்டிருக்கும் உங்களில் அநேகர் நிச்சயமாக இவ்வித அனுபவங்களினூடே கடந்து சென்று இருப்பீர்கள். ஆபத்து என்று வரும்பொழுது தங்களைக் காக்கவும், உடன் இருப்பவர்களை கைவிடுவதும் கால காலமாய் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு தீர்வு என்ன என்று வேதாகமம் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். சங்கீதத்தில் தாவீது கூறும்பொழுது, “இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்க்கிறேன்? நீரே என் நம்பிக்கை’’ என்று கூறுகிறார் (சங்கீதம் 39:7) கர்த்தர் நம் நம்பிக்கையாக இருக்கும்போது கடுமையான சூழ்நிலைகளில் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேவனுடைய வார்த்தையும் அவருடைய வல்லமையும் நம்மை விடுவிக்க போதுமானதாக இருக்கிறது.

 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, பார் போற்றும் அருமையான தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நமக்கு இருக்கின்றது. நான் உனக்கு கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று நம்மோடு தேவன் பேசியிருக்கிறாரே. நீங்கள் தனியே கைவிடப்பட்டு இருப்பீர்கள் என்றால் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சார்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை வழி நடத்துவாராக.

- P.ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு: 

மிஷனெரிகள் தங்கி பயிற்சி பெறுவதற்கென்று ஒரு “மிஷனெரி வீடு” கட்டுவதற்கென தேவைப்படும் ரூ. 2 இலட்சம் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş